சுவாட்மாரமா

யோகி சுவாத்மாராமர் (சமக்கிருதம்: स्वात्माराम; IAST: svātmārāma, ஆங்கிலம்: Yogi Swatmarama) என்பவர் 15 மற்றும் 16 நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு யோகக்கலை முனிவராவார். அத்த பிரதிக்சா அல்லது அத்த யோக வெளிச்சம் என்ற யோகக்கலை கையேட்டிற்காக இவர் அறியப்படுகிறார். சத்கர்மா அல்லது சத்கிரியா, ஆசனங்கள், பிராணாயாமம், முத்திரைகள், மற்றும் பந்தங்களை இக்கையேடு விளக்குகிறது. இப்பயிற்சிகள் மூலம் குண்டலினி அல்லது உயிர்சக்தியை எழுப்பமுடியும். ஆழ்ந்த சமாதி நிலையை நோக்கி மேலும் மேலும் செல்ல முடியும். அத்த யோகத்தின் உண்மையான நோக்கம் ராச யோகம் என்ற மனம் கடந்த பெருநிலையை அடையும்வரை அதாவது பற்றற்ற நிலையை அடையும்வரை குண்டலினியை எழுப்புவது ஒன்றையே சுவாத்மாராமர் கையேடு நோக்கமாக கொண்டுள்ளது[1][2].

கையேட்டிலிருந்து சுவாத்மாராமாரைவைப் பற்றி சிறிதளவே அறியமுடிகிறது. எனினும் அதன் நான்காவது வரியில் நாத சம்பிரதாய பரம்பரையினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது:

புத்தமத துறவியான மச்சிந்தரநாத், கோரட்சநாதர், இத்யாதி போன்றவர்கள் அத்த யோகக் கலையை அறிந்திருந்தனர். அவர்களிடமிருந்து, அவர்களைப் பின்பற்றி சுவாத்மாராமர் அத்த யோகக்கலையைக் கற்றுக் கொண்டார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-10. Retrieved 2018-12-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 Hatha Yoga Pradipika, e-book translated by Pancham Sinh, www.sacredtexts.com

(source) பரணிடப்பட்டது 2016-06-02 at the வந்தவழி இயந்திரம்