சுவாதி முத்து | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்திர பாபு |
தயாரிப்பு | சரோவர் சஞ்சீவ் |
கதை | வி. நாகேந்திர பிரசாத் (வசனம்) |
மூலக்கதை | சிப்பிக்குள் முத்து படைத்தவர் கே. விஸ்வநாத் |
திரைக்கதை | காசினத்துனி விஸ்வநாத் |
இசை | ராஜேஷ் ராமனாத் மூல இசை:இளையராஜா |
நடிப்பு | சுதீப் மீனா கிஷான் ஸ்ரீகாந்த் |
ஒளிப்பதிவு | ஹெச். எம். ராமச்சந்திரா |
படத்தொகுப்பு | ஷ்யாம் யாதவ் |
கலையகம் | சரோவர் புரடக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 26, 2003 |
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடா |
சுவாதி முத்து (Swathi Muthu) 2003இல் வெளிவந்த இந்திய கன்னடத் திரைப்படம் ஆகும், கே. விஸ்வநாத் எழுதி டி. ராஜேந்திரா பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுதீப் மற்றும் மீனா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.[1]
இந்தத் திரைப்படமானது தெலுங்கில் வெளிவந்த ஸ்வாதி முத்தியம் என்ற திரைப்படத்தின் (1986) மறு ஆக்கமாகும். இதில் கமல்ஹாசன் மற்றும் ராதிகா நடித்திருந்தனர்.[2]
சிவையா (சுதீப்), அவரது பாட்டியுடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார். அவரது பாட்டிக்கு நம்பிக்கைக்குரியவராகவும், அவருக்கு கீழ்ப்படிந்தும் நல்லவனாக உள்ளார். 5 வயதான மகனுடன் வசித்து வரும் இளம் விதவையான லலிதாவின் (மீனா) நல்வாழ்விற்காக ஈடுபடும் ஒரு முயற்சியில், சிவையா ஒரு விழாவில் அவரை திருமணம் செய்துகொள்கிறார்.
கிராமவாசிகள் அதிர்ச்சியடைந்து, அவரது நடவடிக்கை பாரம்பரிய சமூக நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கிடையில், சிவையாவின் பாட்டி இறந்துவிடுகிறார். லலிதா தனது புதிய கணவர் மற்றும் மகனுடன் நகரத்தை நோக்கி நகர்கிறார். அவர்களது நண்பர்களில் சிலர் ஆதரவோடு, அங்கு வாழ ஆரம்பிக்கிறார்.
அதன்பின் அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. சிவையாவின் வெகுளித்தனம் லலிதாவை அவரிடம் நெருங்க வைக்கிறது. குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆண்டுகள் பல கடந்து, குழந்தைகள் வளர்கின்றனர், பின்னர் லலிதா தனது கடைசி மூச்சினை விடுகிறார். சிவையா நீண்ட காலமாக அவளது நினைவுகளுடனே வாழ்ந்து வருகிறான். இறுதியில், தனது பழைய வீட்டைத் தனது குழந்தைகளிடமும், பேரப்பிள்ளைகளிலும் விட்டுவிட்டு, அவர் ஒரு துளசி மாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , லலிதாவின் நினைவுகளுடன் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.
இளையராஜா இயற்றிய அசல் பாடல்களிலிருந்து ராஜீஷ் ராமநாதனால் இசையமைக்கப்பட்டது.[3]
வ.எண். | பாடலின் வரிகள் | பாடியோர் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | "ஸ்ரீ சக்ரதாரிகே" | சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
2 | "மாங்கல்யா" | சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
3 | "அன்டடா சந்தடடா" | ராஜேஷ் கிருஷ்ணன், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
4 | "மாலகிரிவா" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
5 | "அம்மா தர்மா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
6 | "லாலி" | ராஜேஷ் கிருஷ்ணன், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
7 | "மனசு பரெடா" | ராஜேஷ் கிருஷ்ணன், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
8 | "சுவ்வி சுவ்வி" | ராஜேஷ் கிருஷ்ணன், சித்ரா | வி. நாகேந்திர பிரசாத் |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் [4]
திரைப்பட ரசிகர்களின் சங்க விருதுகள்
ஹலோ காந்திநகரா விருதுகள்
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help); Unknown parameter |=
ignored (help)