சு. சமுத்திரம் | |
---|---|
பிறப்பு | 1941 திப்பணம்பட்டி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 1 ஏப்ரல் 2003 |
பணி | எழுத்தாளர் |
சு. சமுத்திரம் (Su. Samuthiram, 1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.[1][2][3][4][5]
தமிழ்நாட்டு அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் அமைத்த தமிழிலக்கிய சங்கப்பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்புவகித்தார்.[6] 2001ஆம் ஆண்டு மே மாதம் அப்பதவியைத் துறந்தார்.[7]
(முழுமையானதல்ல)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)