செந்தேள் (Hottentotta tamulus) என்பது சிலந்திதேள் வகுப்பை சேர்ந்த ஒரு தேளாகும். உலகின் மூன்று நஞ்சுள்ள தேள்களில் இத்தேள் முதலாவதாக உள்ளது.[1] இதை இந்தியச்செந்தேள் என்றும் அழைப்பர். இவை இந்தியா,[2] கிழக்கு பாக்கித்தான்[3] நேபாளின் கிழக்கு தாழ்நிலங்களில் காணப்படுகின்றன.,[4] 21ஆம் நூற்றாண்டில் இருந்து இவை ஈழத்தின் யாழ்ப்பாண வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.[5]
இது மிகவும் நஞ்சுள்ள தேளாக இருப்பதால் இந்தியா, நேபாளத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் மனிதர்களின் உயிரழப்புக்குக் காரணமாக உள்ளன. இறப்பு விகிதம் 8 முதல் 40 சதவீதமுள்ளது. இறப்பவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகளே.[6]