செரி அமான் (P202) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Sri Aman (P202) Federal Constituency in Sarawak | |
செரி அமான் மக்களவைத் தொகுதி (P202 Sri Aman) | |
மாவட்டம் | செரியான் மாவட்டம் செபுயாவ் மாவட்டம் செரி அமான் மாவட்டம் லிங்கா மாவட்டம் பாந்து மாவட்டம் |
வட்டாரம் | செரியான் பிரிவு சமரகான் பிரிவு செரி அமான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 50,164 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செரி அமான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | செரியான்; அசா செயா கோத்தா சமரகான் |
பரப்பளவு | 2,678 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1987 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | டோரிஸ் சோபியா பிராடி (Doris Sophia Brodi) |
மக்கள் தொகை | 62,863 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1990 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செரி அமான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sri Aman; ஆங்கிலம்: Sri Aman Federal Constituency; சீனம்: 斯里阿曼国会议席) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவு; செரியான் பிரிவு; செரி அமான் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; செரியான் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; செரி அமான் மாவட்டம்; லிங்கா மாவட்டம்; பாந்து மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P202) ஆகும்.[5]
செரி அமான் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1990-ஆம் ஆண்டில் இருந்து செரி அமான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செரி அமான் பிரிவு (Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[7]
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் முறை (Division) இன்றும் நீடிக்கிறது. முன்பு சரவாக்கில் ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.
செரி அமான் பிரிவின் மொத்த பரப்பளவு 5,466.7 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 111,400. இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும். இவர்களில் சீனர் மக்கள் தான் பெரும்பான்மையில் உள்ளனர்.
செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மாலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசியப் பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.
செரி அமான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செரி அமான் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
8-ஆவது மக்களவை | P163 | 1990-1995 | டேனியல் தாஜம் மிரி (Daniel Tajem) |
பாரிசான் நேசனல் (சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS) |
9-ஆவது மக்களவை | P175 | 1995-1999 | ஜிம்மி லிம் (Jimmy Lim @ Jimmy Donald) | |
10-ஆவது மக்களவை | P176 | 1999-2004 | பாரிசான் நேசனல் (சரவாக் மக்கள் கட்சி) (PRS) | |
11-ஆவது மக்களவை | P202 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | மாசிர் குஜாட் (Masir Kujat ) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2019 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் மக்கள் கட்சி) (PRS) | |||
2019-2022 | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | |||
2022 | சுயேச்சை | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | டோரிஸ் சோபியா பிராடி (Doris Sophia Brodi) |
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் மக்கள் கட்சி) (PRS) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
டோரிஸ் சோபியா பிராடி (Doris Sophia Brodi) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 14,131 | 44.27 | 44.27 | |
வில்சன் எந்தபாங் (Wilson Entabang) | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | 10,092 | 31.62 | 31.62 | |
மாசிர் குஜாட் (Masir Kujat) | சுயேச்சை (Independent) | 5,673 | 17.77 | 17.77 | |
தாய் வெய் வெய் (Tay Wei Wei) | பாக்காத்தான் (PH) | 2,021 | 6.33 | 29.85 ▼ | |
மொத்தம் | 31,917 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 31,917 | 98.36 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 532 | 1.64 | |||
மொத்த வாக்குகள் | 32,449 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 50,164 | 63.63 | 7.18 ▼ | ||
Majority | 4,039 | 12.65 | 12.65 ▼ | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)