செலுபு (P126) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Jelebu (P126) Federal Constituency in Negeri Sembilan | |
செலுபு மக்களவைத் தொகுதி (P126 Jelebu) | |
மாவட்டம் | செலுபு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 60,820 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | செலுபு |
முக்கிய நகரங்கள் | கோலா கெலாவாங் |
பரப்பளவு | 1,717 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சலாலுடின் அலியாஸ் (Jalaluddin Alias) |
மக்கள் தொகை | 64,200[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செலுபு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jelebu; ஆங்கிலம்: Jelebu Federal Constituency; சீனம்: 日叻务国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், செலுபு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P126) ஆகும்.[5]
செலுபு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து செலுபு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செலுபு மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்தச் செலுபு மாவட்டம், செம்போல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாவட்டமாகும். விவசாயத் துறையை முதன்மையாகக் கொண்ட மாவட்டம்.
சிரம்பான் மாவட்டம்; செம்போல் மாவட்டம்; கோலா பிலா மாவட்டம்; பகாங் மாநிலம்; மற்றும் சிலாங்கூர் மாநிலம்; ஆகியவை செலுபு மாவட்டத்தின் எல்லைகளாக உள்ளன. செலுபு ஒரு புறநகர் மாவட்டம் ஆகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் சுங்கை முன்தோ (Sungai Muntoh) எனும் செழிப்பான ஒரு ஈயச் சுரங்க நகரம் இருந்தது. அண்மையில் இங்கு விலைமதிப்பற்ற காலனித்துவ கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கலைப் பொருட்கள் தற்போது அரசு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
செலுபு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் செலுபு தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P089 | 1974–1978 | ரயிஸ் யாத்திம் (Rais Yatim) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் சமாட் இட்ரிஸ் (Abdul Samad Idris) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | ரயிஸ் யாத்திம் (Rais Yatim) | ||
7-ஆவது மக்களவை | P103 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | இப்ராகிம் சாலே (Ibrahim Salleh) | ||
9-ஆவது மக்களவை | P113 | 1995–1999 | யூனோஸ் ரகமாட் (Yunus Rahmat) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | ரயிஸ் யாத்திம் (Rais Yatim) | ||
11-ஆவது மக்களவை | P126 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2017 | சைனுடின் இசுமாயில் (Zainudin Ismail) | ||
2017-2018 | காலி[N 1] | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சலாலுடின் அலியாஸ் (Jalaluddin Alias) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சலாலுடின் அலியாஸ் (Jalaluddin Alias) | பாரிசான் நேசனல் | 21,805 | 48.10 | 0.83 ▼ | |
சுல்கிப்லி முகமது உமார் (Zulkefly Mohamad Omar) | பாக்காத்தான் அரப்பான் | 13,680 | 30.18 | 13.50 ▼ | |
சகாருடின் பாபா சாமன் (Zaharuddon Baba Samon) | பெரிக்காத்தான் நேசனல் | 9,596 | 21.17 | 21.17 | |
அகமட் பக்ரி அபு சாமா (Ahmad Fakri Abu Samah) | தாயக இயக்கம் | 253 | 0.56 | 0.56 | |
மொத்தம் | 45,334 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 45,334 | 98.54 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 674 | 1.46 | |||
மொத்த வாக்குகள் | 46,008 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 59,561 | 75.11 | 6.78 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)