சைபுதீன் சௌத்ரி Saifuddin Choudhury | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் கத்வா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1996 | |
முன்னையவர் | திரேந்திரநாத் பாசு |
பின்னவர் | மகபூப் சகீதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஆகத்து 1952 மெமரி, மேற்கு வங்காளம் |
இறப்பு | 14 செப்டம்பர் 2014 (வயது 62) புது தில்லி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), சனநாயக சோசலிசக் கட்சி |
துணைவர் | உருக்சானா சௌத்ரி |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணி |
சைபுதீன் சௌத்ரி (Saifuddin Choudhury) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவர் சனநாயக சோசலிசக் கட்சியை உருவாக்கினார்.[1]
சைபுதீன் சௌத்ரி 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் கத்வா மக்களவைத் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சா பானோ வழக்கில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தார்.[3] பின்னர் நரசிமா ராவ் அரசு குறித்த விவாதத்திலும் இவர் முக்கியப் பங்காற்றினார்.[4] 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இயாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மிகவும் மோசமாக தோற்றார். இவரது கட்சி உறுப்பினர் பதவி புதுப்பிக்கப்படவில்லை.[5][6]
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் காலமானார்.