சைமின்கள் (Cymene) என்பவை C10 H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பென்சீன் வழிப்பெறுதிகளாகும். நிறமற்ற அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மங்களான இவற்றின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் பதிலீடுகளாக ஓர் ஐசோபுரோப்பைல் குழுவும் (−CH(CH3)2) ஒரு மெத்தில் குழுவும் (−CH3) இணைந்திருக்கும். சைமின் கட்டமைப்பில் இக்குழுக்களின் இடவமைப்பு வேறுபாடுகளால் C10 H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் மூன்று வகையான அமைப்பு மாற்றியன்கள் உருவாகின்றன. பென்சீன் வளையத்துடன் வேறு 4 கார்பன் அணுக்கள் கொண்ட அரோமாட்டிக் சேர்மங்கள் என்பதைக் குறிக்கும் C4-பென்சீன்கள் என்ற குழுவைச் சேர்ந்தவையாகவும் இவை கருதப்படுகின்றன. பாரா-சைமின் என்ற மாற்றியன் நன்கு அறியப்பட்ட ஒரு சைமின் ஆகும். டெர்பீன்களில் ஒன்றான இது இயற்கையில் சீரக எண்ணெயிலிருந்து கிடைக்கிறது. [1] ஆர்தோ-சைமின், மெட்டா-சைமின் என்பவை இதர இரண்டு மாற்றியன்களாகும். செயற்கை பிசின்கள் தயாரிப்பு மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் சைமின்கள் பயன்படுகின்றன.
சைமின்கள் | |||
பெயர் | ஆ-சைமின் | மெ-சைமின் | பா-சைமின் |
---|---|---|---|
கட்டமைப்பு வாய்ப்பாடு | |||
சிஏஎசு எண் | 527-84-4 | 535-77-3 | 99-87-6 |