மௌலானா சையித் மும்தாஸ் அலி தேவ்பந்த் | |
---|---|
பதவி | ஷம்ஸ் அல்-உலமா |
சுய தரவுகள் | |
பிறப்பு | 27 செப்டம்பர் 1860 |
இறப்பு | 15 சூன் 1935 லாகூர், பிரித்தானிய இந்தியா | (அகவை 74)
சமயம் | இசுலாம் |
மனைவி | முகம்மதி பேகம் |
குழந்தைகள் | இம்தியாஸ் அலி தாஜ் (son) |
சமயப் பிரிவு | சுன்னி இசுலாம் |
Movement | தியோபந்தி |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | தெஹ்ஸீப்-இ-நிஸ்வான், அக்-இ-நிஸ்வான், தஃபால் அல்-பயான் ஃபா மாகீத் அல்-குர்ஆன் |
Alma mater | தாருல் உலூம் தேவ்பந்த் |
ஆசிரியர் | Muhammad Yaqub Nanautawi and Muhammad Qasim Nanautawi |
Relatives | Naeem Tahir (grandson), Faran Tahir (great-grandson) |
Founder of | Rifah-e-Aam Press |
சையித் மும்தாஜ் அலி தேவபந்த் (Sayyid Mumtaz Ali Deobandi) (27 செப்டம்பர் 1860 - 15 சூன் 1935) இந்திய சுன்னி இசுலாம் அறிஞரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்கள் உரிமைகளை ஆதரித்தவரும் ஆவார். இவர் தாருல் உலூம் தேவ்பந்த்தின் முன்னால் மாணவராவார். இவர் தனது மனைவி முகம்மதி பேகமுடன் தொடங்கிய இதழ்களான அக்-இ-நிஸ்வான் , தெஹ்ஸீப்-இ-நிஸ்வான் ஆகிய இரண்டும் பெண்கள் உரிமைகள் தொடர்பான முன்னோடி படைப்புகள் என்று கூறப்படுகிறது [1]
சையித் மும்தாஜ் அலி செப்டம்பர் 27, 1860 அன்று தேவபந்தில் பிறந்தார். [2] இவர் மகமூத் ஹசன் தேவந்தின் சகாவாகவும் சமகாலத்தவராகவும் இருந்தார். மேலும் தாருல் உலூம் தேவ்பந்த்தில் முகம்மது யாகூப் நானௌடாவி மற்றும் முகம்மது காசிம் நானௌடாவி ஆகியோருடன் படித்தார் . [3]
தேவ்பந்த்தில் பட்டம் பெற்ற பிறகு, இவர் லாகூருக்குச் சென்று "தாருல் இஷாத்" என்ற பதிப்பகத்தை நிறுவினார். சூலை 1, 1898 இல், இவர் தனது மனைவி முகம்மதி பேகம்மை ஆசிரியராகக் கொண்டு தெஹ்ஸீப்-இ-நிஸ்வான் என்ற பத்திரிகையை வெளியிட்டார். [4] இந்த பத்திரிகை பின்னர் 1949இல் நிறுத்தப்பட்டது. 1898ஆம் ஆண்டில், இவர் லாகூரில் "இரிஃபா-இ-ஆம் அச்சகம் " என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கினார். இது ஒரு முஸ்லிமை உரிமையாளராகக் கொண்ட லாகூரின் முதல் பத்திரிகை எனக் கூறப்பட்டது. [5] பின்னர், 1905ஆம் ஆண்டில், இவர் முஷர்-இ-மாதர் (தாயின் ஆலோசகர்) என்று ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் 1909ஆம் ஆண்டில் குழந்தைகள் இதழான ஃபுல் (மலர்) தொடங்கி, [6] உருது மொழியில் குழந்தைகள் இலக்கியத்தின் அடித்தளத்தையும் அமைத்தார்.
மும்தாஸ் அலி 1934 இல் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் "ஷம்ஸ்-உல்-உலமா" என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். [7]
இவர், 15 சூன் 1935 அன்று லாகூரில் காலமானார். [8]
அமெரிக்க வரலாற்றாசிரியர், கெயில் மினால்ட் தனது கட்டுரையில் "சையித் மும்தாஜ் அலி மற்றும் 'அக் அன்-நிஸ்வான்': பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகளுக்கான ஒரு வழக்கறிஞர்" என்று கூறினார். 'மும்தாஸ் அலியின் அக்-இ-நிஸ்வான் அதன் காலங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி முன்கூட்டியே வெகு தொலைவில் இருந்தது . எவ்வாறாயினும், முஸ்லீம் தனிப்பட்ட சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்த தற்போதைய விவாதத்தைப் பார்க்கும்போது, இசுலாமியச் சட்ட முறைமையில் இந்த ஆரம்பகால பெண்கள் உரிமைகளை நினைவில் கொள்வது நல்லது. [9] இவரது குரான் குறித்த படைப்பான தஃபால் அல்-பயான் ஃபா மாகீத் அல்-குர்ஆன் என்பதை பாராட்டி, ஜெருசலேமின் முன்னாள் அதிபர் முப்தி, அமீன் அல்-ஹுசைனி, "இத்தகைய புத்தகம் அரபு உலகில் கூட இல்லை" என்று கருத்துரைக்கிறார். குர்ஆனைப் பற்றிய இந்த 6 தொகுதிகள் அடங்கிய படைப்புகள் அன்வர் ஷா காஷ்மீரி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் சையத் சுலைமான் நட்வி உள்ளிட்ட அறிவார்ந்த நபர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றன.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)Asir Adrawi. Tazkirah Mashāhīr-e-Hind: Karwān-e-Rafta (in Urdu) (2nd, April 2016 ed.). Deoband: Darul Moallifeen. p. 246.