ஐக்கிய இராச்சிய சைவ உணவுமுறைச் சங்கம் | |
1847-ல் சைவ உணவுமுறைச் சங்கம் துவங்கப்பட்ட நார்த்வுட் வில்லாவின் உட்புறத் தோற்றம் | |
சுருக்கம் | VSUK |
---|---|
உருவாக்கம் | 30 செப்டம்பர் 1847 |
நிறுவப்பட்ட இடம் | ராம்ஸ்கேட், கென்ட், இங்கிலாந்து |
ஒன்றிணைந்தது |
|
வகை | தொண்டு நிறுவனம் |
பதிவு எண் | 259358 |
சட்ட நிலை | தொண்டாற்றல் |
நோக்கம் | சைவ உணவுமுறை |
தலைமையகம் | மான்செஸ்டர், இங்கிலாந்து |
சேவை | ஐக்கிய இராச்சியம் |
உறுப்பினர்கள் (2023) | 6,500[1] |
தலைவர் (CEO) | ரிச்சர்டு மெக்கில்வெயின்[2] |
மைய அமைப்பு | தி பாட் (The Pod) |
வருவாய் (2023) | £1,081,545[3] |
செலவுகள் (2023) | £1,426,451[3] |
பணிக்குழாம் (2023) | 18[3] |
வலைத்தளம் | vegsoc |
சைவ உணவுமுறைச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது | |
---|---|
படிமம்:Vegetarian Society approved logo.png | |
நடைமுறையிலுள்ள இடம் | உலகளாவிய |
நடைமுறைக்கு வந்த நாள் |
|
இணையதளம் | vegsoc.org/trademarks |
ஐக்கிய இராச்சியத்தின் சைவ உணவுமுறைச் சங்கம் (ஆங்கில மொழி: Vegetarian Society of the United Kingdom [VSUK]) என்பது உணவுமுறை மாற்றங்களுக்காக பிரச்சாரம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஆகும்.[1] சைவ மற்றும் நனிசைவ உணவு வகைகளுக்கான வர்த்தக முத்திரைகளை அங்கீகரித்தல், ஒரு சமையல் பள்ளி மற்றும் லாட்டரியை நடத்துதல், மற்றும் இங்கிலாந்தில் தேசிய சைவ உணவுமுறை வாரத்தையும் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை சைவ உணவுமுறைச் சங்கத்தின் பிராதன செயற்பாடுகளாகும்.
19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள பல்வேறு குழுக்கள் இறைச்சியைத் தவிர்த்த உணவுகளை ஊக்குவிக்கத் துவங்கின. இதுவே 1847-ல் சைவ உணவுமுறைச் சங்கத்தை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் இது 1888-ல் மான்செஸ்டர் மற்றும் லண்டன் சைவ உணவுச் சங்கங்களாகப் பிரிந்து, 1969-ல் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து தன் செயற்பாடுகளைத் தொடர்ந்தது. பொதுக் கல்வி மற்றும் உணவு உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்தல் ஆகியவை மூலம் இச்சங்கம் சைவ உணவுமுறையைப் பரப்பி வருகிறது.