சோபா நாராயண் (Shoba Narayan) என்பவர் இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் மான்சூன் டைரி: எ மெமோயர் வித் ரெசிப்ஸ் (2003) எனும் விருது பெற்ற நூலை எழுதியுள்ளார். இவர் நான்கு புத்தகங்களை எழுதியவர் ஆவார்.
சோபா சென்னை, பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் வெளிநாட்டு மாணவராக நுண்கலைகளைப் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி பள்ளியில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதுவரை சோபா நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ப்ரஞ்ச் இதழின் வழக்கமான பத்தியில் இவர் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இவர் இதற்கு முன்பு இந்திய நிதி நாளிதழான மின்ட்[1] மற்றும் அபுதாபி நாளிதழான தி நேஷனல் ஆகியவற்றில் பங்களித்துள்ளார்.[2]