சோபா மோகன் Shobha Mohan | |
---|---|
பிறப்பு | கொட்டாரக்கரை, கொல்லம், கேரளா, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் |
|
வாழ்க்கைத் துணை | கே. மோகன்குமார் (தி. 1984) |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | சாய்குமார் (சகோதரர்) |
சோபா மோகன் (Shobha Mohan) மலையாளத் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.[1]
சோபா மோகன், கேரளாவின் கொல்லத்திலுள்ள கொட்டாரக்கரையில் நடிகர் கொட்டாரக்கரை ஸ்ரீதரன் நாயர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மலையாள நடிகர் சாய்குமாரின் மூத்த சகோதரி ஆவார்.[2] 1982 ஆம் ஆண்டில் முகேஷுக்கு இணையாக பலூன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[3] இவர் மலையாள நாடகக் கலைஞர் கே. மோகன்குமாரை நவம்பர் 5,1984 அன்று மணந்தார்.[4] நடிகர்கள் வினு மோகன் மற்றும் அனு மோகன் ஆகியோர் இவர்களது மகன்கள் ஆவர். நடிகை வித்யா மோகன் இவரது மருமகள் ஆவார்.