சௌமகல்லா அரண்மனை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | அரசவை |
இடம் | ஹைதராபாத், தெலங்கானா, இந்தியா |
நிறைவுற்றது | 1880 |
சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆசாப் அலி வம்சத்தின் ஐதராபாத் நிசாம் மன்னர் கட்டிய நான்கு அரண்மனைகள் ஆகும்.
இந்த நான்கு அரண்மனைகளும் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத் நிசாம் அசாப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இவ்வரண்மனைகள் 1750-இல் கட்டத் துவங்கப்பட்டது.[1]அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் நிறைவுற்றது.
45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வரண்மனை இரண்டு தர்பார் கூடங்கள் மற்றும் இரண்டு தாழ்வாரங்களுடன் கூடியது. மேலும் கூட்ட அரங்குகள், நீரூற்றுகள், தோட்டங்களுடன் கூடியது. இந்த சௌமகல்லா அரண்மனைகளுக்கு, 15 மார்ச் 2010-இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய பண்பாட்டு தலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.[2][3]