ஜம்மு காஷ்மீரில் பெண்களின் உரிமைகள் (Women's rights in Jammu and Kashmir) என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஜம்மு -காஷ்மீரில் பெண்களின் உரிமைக்காகப் போராட பல சிறிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.[1] 1947 ஜம்மு காஷ்மீர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்ததால் இப்பிராந்தியப் பெண்களைப் பாதிக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கு வழிவகுத்தது.[2] [3] காஷ்மீர் பெண்கள், ஒரு ஆணாதிக்க சமூகத்தின் உறுப்பினர்களையும், சமத்துவமின்மையையும் , பாகுபாட்டையும் எதிர்த்து போராட வேண்டியிருந்தது. 1988ஆம் ஆண்டில் ஜம்மு -காஷ்மீரில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இந்தியத் தரைப்படை, மத்திய சேமக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய பாதுகாப்புப் படைகளால் கற்பழிப்பு ஒரு 'போர் ஆயுதம்' என பல மனித உரிமை அமைப்புகளுடன் பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர்.[4] [5] [6] [7] காஷ்மீரின் முஸ்லிம் பெண்கள் மீது இந்திய மாநிலப் பாதுகாப்புப் படையினர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்யும் வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. பெண்கள் போராளிகளின் வன்முறைக்கும் பலியாகியுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெண்களின் உரிமைகள் பெரும் சிக்கல்களைக் கொண்டுள்ளன.[8] விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இளம் முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்துவது,[9] திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கோருதல்,[10] குடும்ப வன்முறைச் சம்பவங்கள், [11] முக்காடு அணியாத பெண்கள் மீது அமிலத் தாக்குதல், [12] ஆண்கள் பொதுவாக பெண்களை விட தங்களை உயர்ந்தவர்களாக கருதுவது போன்றவை.
ஜம்மு -காஷ்மீரின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் இப்பகுதியில் பாலின வேறுபாடுகளை அதிகரித்துள்ளது. ஆண்கள் அதன் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும், பெண்கள் பாரம்பரியமாக உள்ளூரிலேயே கட்டுப்படுத்தப்படுகின்றர். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கல்விகான கல்வி அணுகல் இல்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு -காஷ்மீரில் எழுத்தறிவு விகிதம் 68.74 சதவீதமாக இருந்தது, இதில் பெண்களின் கல்வியறிவு 58.01 சதவீதம். பெண்களின் உயர்நிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் ஆண் விகிதத்தை விட அதிகமாக உள்ளது. மேலும்,இங்குள்ள ஒவ்வொரு மூன்று வயது வந்த பெண்களிலும் ஒருவருக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது (வயது வந்த ஐந்து ஆண்களில் ஒருவருடன் ஒப்பிடும்போது).
பல கிராமப்புறங்களில், ஒரு மகனின் பிறப்பு கொண்டாடப்படும் அளவிர்கு மகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆண்களுக்கு வேலை கிடைத்து ஒரு குடும்பத்தை பராமரிக்க உதவுவதாக பார்க்கப்படுகிறது. பெண்கள் திருமணமாகி வீட்டை விட்டு வெளியேறுவதால், செலவாக பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பது பற்றிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாட்டின் பிரிவு 10, இத்தகைய பாலின சமத்துவத்தை கல்வியால் மட்டுமே அகற்ற முடியும் என்பதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெண்களுக்கு கல்வியில் பாலின வேறுபாடு நீக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த ஜம்மு காஷ்மீர் அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தகுதிவாய்ந்த பெண் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பள்ளி உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது. மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதங்களிலும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
ஐ.நா.பொதுச் சபையின் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின்படி, குடியுரிமை கொள்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.[13] இருப்பினும், ஜம்மு -காஷ்மீரில், ஆண்கள் மற்றும் பெண்களிடையே குடியுரிமை சமமற்றதாக இருக்கிறது.[13] ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டவரை மணந்தால், அந்த மாநிலத்தில் அசையாச் சொத்தை வாரிசாக, சொந்தமாக அல்லது வாங்குவதற்கான உரிமையை அவள் இழக்கிறாள்;[14] இதேபோன்ற சூழ்நிலையில் எந்த ஒரு ஆணையும் இத்தகைய சட்டம் பாதிப்பதில்லை.[14] மதச்சார்பற்றவர்கள் மற்றும் இன தேசியவாதிகள் காஷ்மீர் கலாச்சாரத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே அதன் அடையாளத்துடன் உலகமயமாக்கலுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் உயிர்வாழ முடியும் என்று நம்புகிறார்கள்.[14] மேலும் காஷ்மீர் பெண்கள் கலாச்சார வாசலைக் கடக்க ஊக்கமளிப்பதில்லை.[14]