ஜலகம் வெங்கல ராவ் இவா் இந்தியாவின்,ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, 11 டிசம்பர் 1973 முதல் மார்ச் 1978 வரை இருந்தாா். இந்திய தேசிய காங்கிரஸின் ஆந்திரா மாநில தலைவராகவும் இருந்துள்ளார் . முதலமைச்சர் காசு பிரமானந்த ரெட்டி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். பின்பு இந்திரா காந்தி அவர்களால் ஆந்திரா மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார் [1][2] இவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் கம்மம் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி அமைச்சர் அவையில் தொழித்துறை அமைச்சர் இருந்தார். 12 ஜூன் 1999 அன்று இயற்கை எய்தினார்[3][4][5][6][7][8][9][10][11].