ஜீ தமிழ்

ஜீ தமிழ்
ஜீ தமிழில் தற்போதைய சின்னம்
ஒளிபரப்பு தொடக்கம் 12 அக்டோபர் 2008[1]
15 அக்டோபர் 2017 (உயர் வரையறு தொலைக்காட்சி)
உரிமையாளர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
(இணைக்கப்பட வேண்டும் சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியா)
கொள்கைக்குரல் "மனதால் இணைவோம். மாற்றத்தை வரவேற்போம்"
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) ஜீ திரை
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) 1510 (HD)
1511 (SD)
ஏசியாநெட் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் 206 (SD)
805 (HD)
கேரளா விசன் 64 (SD)
884 (HD)
சுமங்கலி கேபிள் விசன் 096 (SD)
906 (HD)
டிஜிகான் 116 (SD)
903 (HD)
மின் இணைப்பான்
டிஷ் தொலைக்காட்சி
வீடியோகான் டி2எச்
2863 (SD)
2862 (HD)
டாட்டா ஸ்கை 1510 (HD)
1511 (SD)
ஏர்டெல் டிஜிட்டல் டிவி 751 (SD)
752 (HD)
சன் டைரக்ட் 53
ஆஸ்ட்ரோ (தொலைக்காட்சி) 223 (HD)

ஜீ தமிழ் (Zee Tamil or Zee Tamizh) என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்[2] நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 12, 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.[3][4] ஜீ தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[5]

வரலாறு

[தொகு]

இது ஜீ தெலுங்கு மற்றும் ஜீ கன்னடத்திற்கு பிறகு, மூன்றாவது தென்னிந்திய அலைவரிசையாக அக்டோபர் 12, 2008 அன்று ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.[6] மேலும் கனடாவில் எத்னிக் சேனல் குழு என்ற நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது.[7] இந்த அலைவரிசை அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு முதல் தனது சின்னத்தையும் மற்றும் நிறத்தையும் புதுப்பித்ததுடன்,[8] சிறப்பு தூதுவராகாக தமிழ் திரைப்பட நடிகை ஜோதிகா[9] மூலம் உயர் வரையறு தொலைக்காட்சியாக அறிமுகப்படுத்தியது.

ஜீ தமிழின் இரண்டாவது அலைவரிசையாக ஜீ திரை என்ற 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி சேவை சனவரி 18, 2020 ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பை தொடங்கியது.[10] இதை நடிகர் கமல்ஹாசன் என்பவரால் 'ஜீ சினிமா விருது தமிழ் 2020' என்ற பிரமாண்ட விருது விழா மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[11]

நிகழ்ச்சிகள்

[தொகு]

இந்த தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பேச்சு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்ற பல் சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

2018 ஆம் ஆண்டில் செம்பருத்தி என்ற தொடர், இலக்கு அளவீட்டு புள்ளியில் முதலிடம் பிடித்து பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் தொடர்களின் சாதனையை முறியடித்தது. அதே போன்று யாரடி நீ மோகினி (2017-2021), அழகிய தமிழ் மகள் (2017-2019), ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற தொடர்களும் மிகவும் பிரபலமானவை ஆகும்.

சொல்வதெல்லாம் உண்மை (2011-2018), ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் (2016-2019), டான்ஸ் ஜோடி டான்ஸ் (2016-2020), சர்வைவர் தமிழ் 1 (2021) போன்ற உண்மைநிலை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பானது.

விருதுகள்

[தொகு]
  • ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் (2018-முதல்)
    • 2018 ஆம் ஆண்டு முதல், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்னும் தலைப்பில் வழங்கப்படும் விருது விழா ஆகும்.
  • ஜீ சினி விருதுகள் தமிழ் (2020-முதல்)
    • 2020 ஆம் ஆண்டு முதல், தமிழ் திரைப்பட திரையுலக பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் ஒரு விருது விழா ஆகும்.

அலைவரிசைகள்

[தொகு]

என்பது சனவரி 19, 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர திரைப்படத் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது தென்னிந்தியாவில் 6 வது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அலைவரிசையாகும்.

வரவேட்பு

[தொகு]

இந்த அலைவரிசை, 2017 ஆம் ஆண்டு முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்ட பிறகு, பங்குகள் 5% இலிருந்து 13% முதல் 15% வரை உயர்ந்தன. 2017 மற்றும் 2018 ஆண்டுகளில், அதிகம் பார்க்கப்படும் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையாக ஜீ தமிழை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இது தற்பொழுது சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு பிறகு அதிகம் பார்க்கப்படும் அலைவரிசையாக உள்ளது.[12][13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zee launches Tamil channel". Outlook (India). 12 October 2000. https://www.outlookindia.com/newswire/story/zee-launches-tamil-channel/619249/?next. பார்த்த நாள்: 6 August 2017. 
  2. "Zee Tamil goes for the kill as churn grows". Business Standard.
  3. "StarHub launches StarHub TV d'Lite offer". www.telecompaper.com.
  4. "HYPPTV Celebrates Its 7th Year Anniversary With the Introduction of 7 New Channels". Tm.com.my. Archived from the original on 2018-06-26. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  5. "Zee to launch 24-hour Tamil movie channel". The Hindu.
  6. "Zee launches Tamil channel". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
  7. "Tamil channel, ZEE Tamizh launches in Canada". Biz Asia.
  8. "Zee Tamizh re-brands with new logo, tagline and shows to create fresh brand identity". Exchange4media.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  9. "Actor Jyothika to endorse Zee Tamil". The Economic Times.
  10. "Zee Enterprises to launch Tamil movie channel Zee Thirai". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-18.
  11. "#OneYearAnniversary". Zee Thirai. 19 January 2021. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
  12. "Battle for cable TV market: Sun rules in Tamil Nadu but success of Star Vijay's Bigg Boss, Zee, shows churn happening". The Financial Express.
  13. "Zee Tamil goes for the kill as churn grows". பிசினஸ் ஸ்டாண்டர்ட்.

வெளி இணைப்புகள்

[தொகு]