தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜெஃப்ரி டெக்ஸ்டர் பிரான்சிசு வான்டர்சே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 பெப்ரவரி 1990 வத்தளை, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | வண்டா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 158) | 29 சூன் 2022 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 168) | 28 திசம்பர் 2015 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 4 ஆகத்து 2024 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 56) | 30 சூலை 2015 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 27 பெப்ரவரி 2022 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூர்சு விளையாட்டுக் கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சீதுவை ரதோலுவ துடுப்பாட்டக் கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிங்கள விளையாட்டுக் கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 5 ஆகத்து 2024 |
ஜெப்ரி டெக்சுடர் பிரான்சிசு வான்டர்சே (Jeffrey Dexter Francis Vandersay, பொதுவாக ஜெப்ரி வான்டர்சே (பிறப்பு:5 பெப்ரவரி ,1990) என்பவர் இலங்கைதத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் உவெசுலி கல்லூரி, கொழும்பு மாணவர் ஆவார்.[1]
2017-18 நான்கு மாகாணங்களுக்கு இடையே நடைபெற்ற துடுப்பாட்டத் தொடரில் இவர் தம்புல்லா அணி சார்பாக விளையாடினார்.[2] 2018 ஆம் ஆண்டில் மாகாணங்களுக்கு இடையேயான சூப்பர் ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் தம்புலா அணி சார்பாக விளையாடினார்.[3] 2018 ஆம் ஆண்டில் இலங்கை சூப்பர் லீக் தொடரில் காலி அணி சார்பாக விளையாட உள்ளார்.[4]
2015 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார்.[5]
அதே ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை.[6]
டிசம்பர் 25, 2015 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 167 வீரராக ஒருநாள் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 10 இலக்குகளில் வெற்றி பெற்றது. பின் ஓவலில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஓர் இலக்கினைக் கைப்பற்றினார்.[7]
பே ஓவலில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் இலக்காக கோரி ஆன்டர்சன் இலக்கினை வீழ்த்தினார். பின் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. நியூசிலாந்து மற்றும் பாக்கித்தான் அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடததால் உலகக் கோப்பைத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் லசித் மாலிங்கா காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[8]
2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கபட்டது.[9]
நவம்பர் , 2017 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் ரங்கன ஹேரத் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.[10] பின் மே ,2018 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் தொடரில் இடம் பெற்றார். ஆனால் இவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. பின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் இவரின் தவறான நடத்தைக்காக இவர் நாடு திரும்பினார்.[11]
மே, 2018 இல் ஆகஸ்டு 2018 இல் இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[12][13]