பேராசிரியர் ஜெயந்த லால் இரத்தினசேகரா Jayantha Lal Ratnasekera | |
---|---|
கிழக்கு மாகாண ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 செப்டம்பர் 2024 | |
முன்னையவர் | செந்தில் தொண்டமான் |
ஊவா வெல்லச பல்கலைக்கழக உபவேந்தர் | |
பதவியில் பெப்ரவரி 2017 – நவம்பர் 2023 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 நவம்பர் 1962 திருகோணமலை |
துணைவர் | மல்லிகா இரத்தினசேகர |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் மாணவர் | கொழும்பு நாலந்தா கல்லூரி, உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் |
தொழில் | வேதியியல் பேராசிரியர் |
பேராசிரியர் ஜெயந்த லால் இரத்தினசேகரா (Jayantha Lal Ratnasekera, பிறப்பு: 4 நவம்பர் 1962) இலங்கைக் கல்வியாளரும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் ஆவார். இவர் இலங்கையின் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.
இரத்தினசேகரா தனது தொடக்கக் கல்வியை கந்தளாய், அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1888 இல் மொஸ்கோ பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுமாணிப் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 1993 இல் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
ஜயந்த லால் 1996 இல் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகச் சேர்ந்தார். 2018 இல் வேதியியலில் பேராசிரியரானார். 1996 முதல் 1999 வரை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் துறையின் தலைவராகவும் பின்னர் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 2017 இல் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக அன்றைய அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[1][2]
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம், அறிவியல் கல்வி ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் இருந்தன.[3] இரத்னசேகர பல பயிற்சி திட்டங்களிலும் பட்டறைகளிலும் ஒரு பயிற்சியாளராக இருந்துள்ளார்.[4][5][6][7][8][9] இவர் ஒரு சார்பிலா பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர்.[10][11][12][13][14][15][16][17]
ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாணத்தின் 9-ஆவது ஆளுநராக அரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்கவினால் 2024 செப்டம்பர் 25 அன்று நியமிக்கப்பட்டார்.[18][19]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: bot: original URL status unknown (link)