ஜெலி (P030) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Jeli (P030) Federal Constituency in Kelantan | |
ஜெலி மக்களவைத் தொகுதி (P030 Jeli) | |
மாவட்டம் | ஜெலி மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 59,894 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | ஜெலி தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஜெலி மாவட்டம், ஜெலி நகரம், கோலா பாலா, பெலிம்பிங் |
பரப்பளவு | 1,500 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | சுயேச்சை |
மக்களவை உறுப்பினர் | சகாரி கெச்சிக் (Zahari Kechik) |
மக்கள் தொகை | 78,592 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
ஜெலி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jeli ; ஆங்கிலம்: Jeli Federal Constituency; சீனம்: 日里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், ஜெலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P030) ஆகும்.[8]
ஜெலி மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து ஜெலி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
ஜெலி மாவட்டம் கிளாந்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். ஜெலி மாவட்டத்திற்கு மேற்கில் பேராக் மாநிலம்; வடக்கே தாய்லாந்து வாங் மாவட்டம் (Waeng District); வடகிழக்கில் கிளாந்தான், தானா மேரா மாவட்டம்; மற்றும் கோலா கிராய் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[10]
ஜெலி மாவட்டம், முதலில் ஒரு தன்னாட்சித் துணை மாவட்டமாக இருந்தது. 1982 சூலை 1-ஆம் தேதி, தானா மேரா மாவட்டம் மற்றும் கோலா கிராய் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டன. அந்தப் பகுதிகளைக் கொண்டு ஒரு துணை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ஜெலி துணை மாவட்டம். அதன் பின்னர் 1986 சனவரி 1-ஆம் தேதி, ஜெலி மாவட்டம் முழு மாவட்டமாகத் தகுதி பெற்றது.
ஜெலியில் உள்ள பெரும்பாலான மக்கள் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு சொந்தமான இரப்பர் தோட்டங்கள் உள்ளன. வெளியூர் மக்களும் இங்கு வந்து இரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.
பொதுவாக இங்குள்ள குடும்பங்கள், 6 ஏக்கர்கள் (24,000 m2) - 50 ஏக்கர்கள் (200,000 m2) அளவிலான சிறிய பெரிய தோட்டங்களை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் ஜெலி மாவட்டத்தில் குடியேறிய முதல் தலைமுறையினராகும்; சொந்தமாகக் காடுகளை அழித்து வேளாண் தோட்டங்களை உருவாக்கியவர்கள்.[11]
ஜெலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் ஜெலி தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P030 | 1995–1999 | முசுதபா முகமது (Mustapa Mohamed) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமது அபாண்டி முகமது (Mohd Apandi Mohamad) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | முசுதபா முகமது (Mustapa Mohamed) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
சுயேச்சை | ||||
2018–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–2024 | சகாரி கெச்சிக் (Zahari Kechik) | ||
2024–தற்போது வரையில் | சுயேச்சை |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
59,798 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
43,732 | 71.83% | ▼ - 11.65% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
42,953 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
144 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
635 | ||
பெரும்பான்மை (Majority) |
12,464 | 29.02% | + 11.88 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | சகாரி கெச்சிக் (Zahari Kechik) |
27,072 | 63.03% | + 24.48% | |
பாரிசான் நேசனல் | நோர்வகிதா பதுவான் (Norwahida Patuan) |
14,608 | 34.01% | - 21.88 % ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | முகமது ராட்சி வகாப் (Md Radzi Wahab) |
1,140 | 2.65% | - 2.71 % ▼ | |
பூமிபுத்ரா கட்சி | முகமது தாவூத் (Mohammad Daud) |
133 | 0.31% | + 0.31% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 42,953 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 635 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 144 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 43,732 | 71.83% | - 11.65% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 59,798 | ||||
பெரும்பான்மை (Majority) | 12,464 | 29.02% | + 11.88% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[13] |