ஜெலுத்தோங் Jelutong | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 5°23′42″N 100°18′37.8″E / 5.39500°N 100.310500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
அரசு | |
• உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி (ஜசெக) |
• ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி | ராஜாஜி சனிசுவர நேதாஜி ராயர் (RSN Rayer) (ஜ.செ.க)[1][2] |
• சுங்கை பினாங்கு சட்டமன்றத் தொகுதி | லிம் சியூ கிம் (Lim Siew Khim) (ஜ.செ.க) |
• பினாங்கு தீவு மேயர் | இயூ துங் சியாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 11600 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
இணையதளம் | mbpp |
ஜெலுத்தோங் (ஆங்கிலம்: Jelutong; மலாய் மொழி: Jelutong; சீனம்: 日落洞; ஜாவி: جلوتوڠ) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும். முன்பு காலத்தில் இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.[3]
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆச்சே மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் இந்தப் பகுதியின் சுற்று வட்டாரங்களில் குடியேறியனர். அதிலிருந்து இங்கு மக்கள் வசித்து வருகின்றனர்.[4]
1980-ஆம் ஆண்டுகளில் நகரமயமாக்கல், இந்தப் பகுதி பெருநகரப் புறநகர்ப் பகுதியாக மாற்றி அமைத்தது. அது வரையில் இந்த இடம் குண்டர் கும்பல்கள் அதிகமாக வாழும் இடமாக இருந்தது.
ஒரு காலத்தில் இங்கு டயரா கோசதுலாட்டா (Dyera Costulata) எனும் ஒரு வகையான ஜெலுத்தோங் மரங்கள் அதிகமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த மரnக்களின் நினைவாக ஜெலுத்தோங் என்று இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது.[5]
1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய தளபதி பிரான்சிஸ் லைட் வருவதற்கு முன்பே ஜெலுத்தோங் பகுதியில் மக்கள் குடியேறி விட்டனர். ஆச்சே மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் இந்தப் பகுதியில் உள்ள பினாங்கு ஆற்றின் முகப்பில் குடியிருப்பு இடங்களையும் கிராமங்களையும் நிறுவி விட்டனர்.[4]
19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், விவசாய நோக்கங்களுக்காக அப்போதைய ஜெலுத்தோங் வனப்பகுதி முதலில் துப்புரவு செய்யப்பட்டது. நகர்ப்புற மக்கள் ஜார்ஜ் டவுனில் இருந்து தெற்கு நோக்கி பரவினர். அதனால் தொழிற்சாலைகள் ஜெலுத்தோங்கில் அமைக்கப்பட்டன.[4]
தொழில்மயமாக்கல் இருந்த போதிலும், சில மீன்பிடி சமூகங்கள் அண்மைய காலம் வரையில் தொடர்ந்து குடியிருந்து வருகின்றன. மேலும் அடுப்புக்கரி தயாரிப்பாளர்கள் இன்னும் கடற்கரையோரங்களில் உள்ள சதுப்புநில சதுப்பு நிலங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.[6]
ஜெலுத்தோங்கில் பெருகி வந்த மக்கள்தொகை காரணமாக குற்றச் செயல்களும் பெருகின. குண்டர்கள் தெருக்களில் சுற்றித் திரிய தொடங்கினர். இருப்பினும் 1980-களில் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு; மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றினால் ஜெலுத்தோங்கில் குற்றச் செயல்கள் குறைந்தன.[4]
மலேசியாவின் பிரபல வழக்கறிஞரான கர்பால் சிங் (Karpal Singh), ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில்தான் முதன்முதலில் தேசிய அரசியல் அரங்கில் நுழைந்தார்.
ஜனநாயக செயல் கட்சியைச் சார்ந்த இவர் 31 ஜூலை 1978 தொடங்கி 29 நவம்பர் 1999 வரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்தார். அந்த வகையில் அவர் 'ஜெலுத்தோங் புலி' (Tiger of Jelutong) எனும் புனைப் பெயரைப் பெற்றார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)