ஜோதி குமார் சின்கா (Jyoti Kumar Sinha) என்பவர் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த சமூக சேவகர். இவர் மத்திய காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராகவும், உளவமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் 1967 தொகுதி பீகார் தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.
ஜே. கே. சின்கா தனது பள்ளிப் படிப்பை பாட்னாவிலுள்ள தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார், பின்னர் பாட்னா கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். இவர் தனது தந்தை மற்றும் தாத்தாவைப் பின்பற்றி 1967-ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். இவரது தாத்தா, மறைந்த சிறீ. ஏ. கே. சின்கா, 1939ஆம் ஆண்டு பீகார் காவல்துறையின் தலைமை இயக்குநர் ஆன முதல் இந்தியர் ஆவார். ஜே. கே. சின்காவின் தந்தையும் ஒரு உளவுத்துறை அதிகாரி ஆவார். இவர் பீகார் காவல்துறையின் தலைவராகவும் பதவி வகித்தார்.
2019-ல், சமூகப் பணித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1][2]