டச் ஸ்டோன் என்பது ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் நாடகத்தில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரமாகும்.
டச் ஸ்டோன் என்பது ட்யுக் ஃபெட்ரிக்கின் (Duke Frederick) அரசவை கோமாளி கதாபாத்திரம் ஆகும். நாடகம் முழுவதும் அவன் மற்ற கதாபாத்திரங்களை பற்றி கூறிக்கொண்டே இருப்பது நாடகத்தை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. அட்ரே (Audrey) என்னும் பெண்ணுடன் டச் ஸ்டோன் காதலில் விழுந்துவிடுகிறான். அதே நகரத்தை சேர்ந்த வில்லியம் (William) என்பவன் அட்ரேவை தவறான வழிகளில் அடைய நிறைய முயற்சிக்கிறான். ஆனால் டச் ஸ்டொனால் மிரட்டி விரட்டப்படுகிறான். டச் ஸ்டோன் அட்ரேவை மனந்தாலும் ஒரு கணிப்பு அவர்கள் உறவை நெருக்கமானதாக ஆக்கவில்லை. அட்ரே டச் ஸ்டோனுடன் உண்மையான காதலுடன் இருக்க வில்லை. அவள் வெறும் பட்டிக்காட்டு பெண்ணாகவே இருந்தாள். சீலியாவின் (celia) பாதுகாப்பிற்காகவும் அவளின் வசதிக்காகவும் டச் ஸ்டோன் காட்டில் பின்தொடர்ந்து செல்வது அவனது பாத்திரம் சுயநலமில்லாததாக காட்டுகிறது.
ரோசலின்டும் (Rosalind) சீலியாவும் நகைச்சுவையாக அவனை இயற்கையான கோமாளி என்று கூறியிருந்தாலும் டச் ஸ்டோன் தன்னை ஒரு அறிவாளியாகவே எண்ணிக் கொண்டான். (" fortune makes nature's natural the cutter-off of nature wit" and "hath sent this natural for our whetstone")[1][2] அடிக்கடி அவனது புத்திசாலித்தனத்தைக் காட்ட அறிவார்ந்த கருத்துக்களின் மூலம் முயற்சிப்பான்.
டச் ஸ்டோன் அவனை ஆவிட் உடன் ஒப்பிட்டுக்கொள்வான். டச் ஸ்டோன் என்ற வார்த்தை ஆர்தர் கோல்டிங் (Arthur Golding) என்பவரது 1575 ஆம் ஆண்டு இரண்டாம் புத்தகத்தின் மொழிபெயர்ப்பில் இருந்து தோன்றியது. அதில் மெர்குரி (Mercury) தந்திரமாக அப்பலோவின் (Apollo) கால்நடைகளை திருடி வைத்துக் கொண்டு பேட்டஸ் (Battus) இடம் கால்நடைகள் எங்கே என கேட்டு அவனை தண்டிக்க டச்ஸ்டோனாக மாற்றி விடுகிறான்.
ஷேக்ஸ்பியரின் கோமாளிகளில், டேவிட் வில்ஸ் (David Wiles) அறிவுறுத்திய படி ராபர்ட் ஆர்மின் (Robert Armin) ஆஸ் யு லைக் இட் முதல் நாடகத்தில் (p145) டச் ஸ்டோனாக நடித்தார். ஆர்மின் டச் ஸ்டோனாக 1599 ல் நடித்ததில் இருந்து அரசவை கோமாளிக்களின் கதாபாத்திரங்களின் தொடக்கமாக அது அமைந்தது. இந்த கதாபாத்திரங்கள் முந்தைய கோமாளி பாத்திரங்களை விட மாறுபட்டிருந்தது. முந்தய கோமாளிகள் வெறும் கைக்கூலிகளாக மட்டுமே இருந்தனர்.