டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
Damansara–Puchong Expressway
Lebuhraya Damansara–Puchong

வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு
Lingkaran Trans Kota Holdings Bhd
நீளம்:40.0 km (24.9 mi)
முக்கிய பாதை: 32.5 km (20.2 mi)
பூச்சோங் மேற்கு இணைப்பு:7.5 km (4.7 mi)
பயன்பாட்டு
காலம்:
1997
இன்று வரையில் –
வரலாறு:டிசம்பர் 1998-இல் கட்டி முடிக்கப்பட்டு; சனவரி 1999-இல் திறக்கப்பட்டது
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:54 சுங்கை பூலோ நெடுஞ்சாலை
28 கோலாலம்பூர் வளைவு 2
பண்டார் ஸ்ரீ டாமன்சாரா
 

E23 இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை

டாமன்சாரா–சா ஆலாம்
2 கோலாலம்பூர்-கிள்ளான்
சா ஆலாம் விரைவுச்சாலை
B11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா
217 புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை
3214 சா ஆலாம்-பூச்சோங் நெடுஞ்சாலை
3215 ஸ்ரீ கெம்பாங்கான் சாலை
South முடிவு:29 சிலாங்கூர், புத்ரா பெர்மாய், அருகில் புத்ராஜெயா–சைபர்ஜெயா விரைவுச்சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
புக்கிட் லாஞ்சான், டாமன்சாரா பெர்டானா, முத்தியாரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், கிளானா ஜெயா, பண்டார் சன்வே , சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், யூஇபி சுபாங் ஜெயா, சுங்கை பீசி, சா ஆலாம், புத்ராஜெயா, சைபர்ஜெயா
நெடுஞ்சாலை அமைப்பு

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை E11 , (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]

இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.

இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.

விளக்கம்

[தொகு]

பொது

[தொகு]

சுங்கை பூலோ நெடுஞ்சாலை (Sungai Buloh Highway); கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (Kuala Lumpur Middle Ring Road 2) ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பரிமாற்றச் சந்திப்பில் டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை தொடங்குகிறது.

ஆகிய வழித்தடங்கள், இந்த டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலையின் கணிசமான இடங்களில் மிக அருகில் செல்கின்றன.

வரலாறு

[தொகு]

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் லிங்காரான் டிரான்ஸ் கோத்தா ஓல்டிங்சு (Lingkaran Trans Kota Holdings Bhd) (Litrak) எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

23 ஏப்ரல் 1996-இல், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 1996-இல் தொடங்கி 1998 டிசம்பரில் முடிவடைந்தது. தொடக்கச் செலவு RM 1.1 பில்லியன்; மொத்தச் செலவு RM 1.4 பில்லியன். இந்த அதிவேக நெடுஞ்சாலை 25 ஜனவரி 1999-இல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Damansara-Puchong Expressway or Lebuhraya Damansara-Puchong, LDP, is a major expressway in Klang Valley that links major townships in Damansara and Puchong and decreases travel time between these 2 locations". பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]