டாமன்சாரா பெர்டானா | |
---|---|
Damansara Perdana | |
ஆள்கூறுகள்: 3°10′6.34″N 101°36′34.87″E / 3.1684278°N 101.6096861°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
டாமன்சாரா பெர்டானா (மலாய்: Damansara Perdana; ஆங்கிலம்: Damansara Perdana); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். கோலாலம்பூர் மாநகருக்கு மிக அருகாமையில் உள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதிக்கு அருகில் பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், முத்தியாரா டாமன்சாரா; டாமன்சாரா ஜெயா; பண்டார் ஸ்ரீ டாமன்சாரா ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன. 1996-ஆம் ஆண்டில் இந்த புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.
RM 1.9 பில்லியன் மொத்த கட்டுமான மதிப்பைக் கொண்டுள்ளது.
டாமன்சாரா பெர்டானா முன்பு ஒரு ஓராங் அஸ்லி கிராமமாக இருந்தது. மேம்பாட்டு நிறுவனமான எம்கே லேண்ட் சவுசானா டிரைங்கல் (MK Land Saujana Triangle) அந்தக் கிராமத்தின் பெரும்பகுதியை விலை கொடுத்து வாங்கியது.[1]
பின்னர் 1996-இல் அதை அபிவிருத்தி செய்யத் தொடங்கியது. அதன் பின்னர், டாமன்சாரா பெர்டானா பெட்டாலிங் ஜெயாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[2]
டாமன்சாரா பெர்டானா 750 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெட்டாலிங் ஜெயாவின் தங்க முக்கோணத்திற்குள் (Golden Triangle of Petaling Jaya) அமைந்துள்ளது. டாமன்சாரா பெர்டானா நகர்ப் பகுதியை எளிதில் அணுகுவதற்குச் சிறந்த நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் உள்ளன. அவையாவன:
டாமன்சாரா பெர்டானாவில் பிரபலமான வணிக நிறுவனங்கள் தங்களின் வணிக மையங்களை அமைத்துள்ளன.
டாமன்சாரா பெர்டானாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள்: