டெடி | |
---|---|
இயக்கம் | சக்தி சௌந்தர்ராஜன் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
கதை | சக்தி சௌந்தர் ராஜன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஆர்யா சாயிஷா சதீஸ் |
ஒளிப்பதிவு | எஸ். யுவா |
படத்தொகுப்பு | டி. சிவானந்தீஸ்வரன் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | டிஸ்னி+ ஹாட் ஸ்டார் |
வெளியீடு | மார்ச்சு 12, 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டெடி (Teddy) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மருத்துவ அதிரடி பரப்பரப்பூட்டும் திரைப்படம் ஆகும். சக்தி சௌந்தர்ராஜன் எழுதி இயக்கிய இந்த படத்தில் ஒரு டெட்டி பியர் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளது. மேலும் ஆர்யா சாயிஷாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சதீஸ், சாக்ஷி அகர்வால், மகிழ் திருமேனி ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டுடியோ கிரீன் என்ற பதாகையின் கீழ் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைக்க இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் தமிழ் படம் இதுவாகும். மேலும் கோச்சடையானுக்குப் பிறகு மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ் படம் இதுவாகும்.[1][2] இது மே.ஊ.சே. இயங்குதளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 12 மார்ச் 2021 இல் வெளியிடப்பட்டது [3]
சிறீவித்யா என்ற கல்லூரி மாணவி ஒரு சிறிய விபத்துக்கு ஆளாகும் போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் அவர் கடத்தப்படுகிறார். முன்னதாக கடத்தல்காரர்கள் அவளை மருத்துவ ரீதியாக செயற்கையாக உண்டாக்கபட்ட கோமாவில் வைத்திருக்கும்போது, அவளது உடல் மூளை சாவு போன்ற நிலையை அடைகிறது. அங்கு அவள் ஒரு டெடி கரடி பொம்மை உடலில் நுழைகிறாள். ஒளிப்பட நினைவு ஆற்றல் கொண்ட சிவா, தனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறான். இந்த திறன் கொண்ட சிவன் குறைந்த காலத்தில் பல முதுகலை பட்டங்கள், பிஎச்டி முடிக்கிறான். ஒரு தொடருந்து பயணத்தின்போது சிவா ஒரு இளைம் பெண்ணை உள்ளூர் குண்டர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். அப்போது டெடி அவனைப் பார்த்து அவனிடமிருந்து உதவி பெற முடிவு செய்கிறது. ஸ்ரீ, டெடியாக இருந்து, தனது உடலைக் கண்டுபிடிக்க சிவாவின் உதவியை நாடுகிறது.
இந்த படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் மார்ச் 2019 இல் அறிவித்தார். இது அவர் ஐந்தாவதாக இயக்கும் படமாகும். மேலும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றும் முதல் படமுமாகும்.[4] படத்தின் படப்பிடிப்பு மே 2019 இல் தொடங்கியது.[5] தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3இல் பங்கேற்ற பிறகு இப்படத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் துணை வேடத்தில் நடிக்க அணுகப்பட்டார்.[6]
தடம் படத்திற்காக அறியப்பட்ட இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தில் துணை வேடத்தில் நடித்தன் வழியாக நடிகராக அறிமுகமாகினார்.[7][8] படத்தின் கருப்பொருளானது இயங்குபடத்தில் டெடி பியர் என்ற சிறப்பு கதாபாத்திரத்தைச் சுற்றி வருகிறது, இது படத்தின் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் தோன்றும். இப்படம் முக்கியமாக சென்னையிலும், ஐரோப்பாவின் ஒரு சில இடங்களில் படமாக்கப்பட்டது.[9]
படத்தின் படப்பிடிப்பானது 2019 திசம்பர் 2019 வரை நடத்தப்படவில்லை.[10] 2020 ஆம் ஆண்டு சூன் மாதம், திருமேணி படமானது திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகும் என்று உறுதிப்படுத்தினார். அவர்கள் ஒரு மேலதிக ஊடக சேவை வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக வதந்திகள் இருந்தபோதிலும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.[11]
மிருதன் (2016), டிக் டிக் டிக் (2018) படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குனருடன் இணைந்து பணியாற்றிய டி. இமான் இந்த படத்திற்கான இசையை அமைத்தார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடிய முதல் ஒற்றை பாடலான என் இனிய தனிமையே 2020 பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.[12][13] பின்னர் என் இனிய தனிமையே கானொளி பாடல் 2021 மார்ச் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.[14]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "என் இனிய தனிமையே" | சித் ஸ்ரீராம் | 04:48 | |
2. | "நண்பியா" | அனிருத் ரவிச்சந்திரன் | 04:51 | |
3. | "மறந்தாயே" | பிரதீப் குமார், ஜொனிதா காந்தி | 04:59 | |
4. | "ரெடி ஸ்டெடி டெடி" | மார்க் தாமஸ் |
டெடி 12 மார்ச் 2021 இல் மேலதிக ஊடக சேவை இயங்குதளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.[3]