டெரிக் மால்கம்

டெரிக் மால்கம் (Derek Malcolm, பிறப்பு: மே 12, 1932) பிரித்தானியாவைச் சார்ந்த திரைப்பட விமரிசகர் ஆவார். இவர் ஈட்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். பல ஆண்டுகளாக தி கார்டியன் பத்திரிகையில் திரைப்பட விமரிசகராகப் பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டின் 27- வது பெர்லின் திரைப்பட விழாவில் நடுவர்களில் ஒருவராக இருந்தார்.[1] 1980களில் பிபிசி2 தொலைக்காட்சியின் தி பிலிம் கிளப் (The Film Club) எனும் நிகழ்ச்சியை நடத்தினார். 2000 ஆம் ஆண்டு தி கார்டியன் பத்திரிகையிலிருந்து விலகிய பின்னர் தனது கடைசி கட்டுரைகளை தி செஞ்சுரி ஆஃப் பிலிம்ஸ் (The Century of Films) எனும் பெயரில் வெளியிட்டார். அதில் உலகளவில் தன்னைக் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றியும் திரைப்பட இயக்குனர்களைப் பற்றியும் எழுதியிருந்தார். பின்னர் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டார்ட் எனும் பத்திரிகையில் தலைமை சினிமா விமரிசகராகப் பணியாற்றினார்.[2] 2008 ஆம் ஆண்டின் 30 வது மாஸ்கோ திரைப்பட விழாவில் நடுவராக இருந்தார்.[3] இவர் பிரிட்டீஷ் பெடரேஷன் ஆஃப் பிலிம் சொசைட்டி (British Federation of Film Societies) மற்றும் சர்வதேச சினிமா விமர்சகர்கள் குழுமத்தின் (International Film Critics) தலைவராகவும் உள்ளார். 2003 ஆம் ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Berlinale 1977: Juries". berlinale.de. Archived from the original on 2005-05-08. பார்க்கப்பட்ட நாள் 2010-07-19.
  2. Stephen Brook, London Evening Standard appoints Andrew O'Hagan as film critic, The Guardian, 7 மே 2009
  3. "30th Moscow International Film Festival (2008)". MIFF. Archived from the original on 2013-04-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-01.