டைசைக்ளோபிளாட்டின் (Dicycloplatin) எனப்படுவது கார்போபிளாட்டின் மற்றும் 1,1-சைக்ளோபியூட்டேன் டைகார்பாக்சிலேட்டு ஆகியனவற்றிலிருந்து வருவிக்கப்படும் ஒரு சேர்மம் ஆகும் [1]. இதை சுருக்கமாக டி.சி.பி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். கார்போபிளாட்டினுடன் ஒப்பிடுகையில் டைசைக்ளோபிளாட்டின் அதிக கரைதிறனும், நிலைப்புத்தன்மையும் கொண்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் முதல்கட்ட[2] மற்றும் இரண்டாம் கட்ட [3] நோய் சோதனைகளில் பயன்படுத்த சோதிக்கப்படுகிறது. சோபோ-சிங்டா மருந்து மற்றும் பயோபிளாட்டின் ஏ.கி [2]. நிறுவனம் இதை உருவாக்குகிறது.