தக்சா வியாஸ் (பிறப்பு 26 டிசம்பர் 1941) இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த குஜராத்தி மொழிக் கவிஞரும், விமர்சகருமாவார். இவர் கல்லுரிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தக்சா வியாஸ், 1941 ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று தற்போதைய குஜராத்தின் தபி மாவட்டத்தில் உள்ள வியாராவில் பிறந்தவர். ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வியாராவில் உள்ள பள்ளிகளில் பயின்றுள்ள இவர், 1962ம் ஆண்டில் சூரத்தில் இளங்கலையும் 1965 ம் ஆண்டில் முதுகலையும் முடித்துள்ளார். மேலும் 1978 ம் ஆண்டில் ஸ்வதந்த்ரியோட்டர் குஜராத்தி கவிதா: பரிதர்ஷன் என்ற பொருளில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1967 ஆண்டிலிருந்து 1973 வரை போர்பந்தரில் உள்ள குருகுல மகிளா கல்லூரியிலும், அதைத்தொடர்ந்து ஓய்வு பெறும் வரை வியாராவிலுள்ள கலைக் கல்லூரியிலும் குஜராத்தி மொழியை கற்பித்துள்ளார். [1]
தக்சா வியாஸ் குஜராத்தி மொழிக் கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த இலக்கிய விமர்சகருமாவார்.
2000 ம் ஆண்டில் வெளியான இவரது கவிதைத்தொகுப்பு அல்பனா என்பதாகும் பாவ்பிரதிபவ் (1981), சவுந்தர்யதர்ஷி கவியோ (1984), ரூபக் கிரந்தி (1988), அனுசர்கா (1998), ஆதிவாசி சமாஜ் (2001) மற்றும் பரிப்ரேக்ஷனா (2004) ஆகியவை இவரது விமர்சனப் படைப்புகள். மேலும் ஆட்டம்னே அஜ்வாலே (2004) என்பது அவரது தத்துவ நூலாகும், அதே சமயம் தத்வசர்ச்சா (1988), சல் மன் வியாரா நகரி (1997) மற்றும் சர்ஜக்னா சன்னிதியே ஆகியவை இவரால் பதிப்பிக்கப்பட்டுள்ள நூற்களாகும். [2] சவுந்தர்யதர்ஷி கவியோ என்ற இவரது ஆய்வுக்கட்டுரை, 1950களின் ராஜேந்திர ஷா, நிரஞ்சன் பகத், உஷ்னாஸ் மற்றும் ஜெயந்த் பதக் ஆகிய நான்கு முன்னணி கவிஞர்களின் ஆய்வு மற்றும் விமர்சனத்தை உள்ளடக்கியதாகும்; [1] சண்முகம் இவரது மற்றுமொரு நூலாகும்