தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. J. Jayalalithaa Music and Fine Arts University - TNJMFAU), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும்.
[1][2][3] தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர், 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4] 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இசைப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட, 11 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.[5][6]
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்,
டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600 028
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044-24629036
மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com
இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்