தமிழி, தமிழ்ப் பிராமி | |
---|---|
ஜம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ் சங்க காலத்தை (400 BCE) சேர்ந்தது. | |
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | பொ.ஊ.மு. 5ம் நூற்றாண்டு - கிட்டத்தட்ட பொ.ஊ. 3ம் நூற்றாண்டு |
திசை | Left-to-right |
மொழிகள் | தமிழ் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | முன் சீனாய் எழுத்துமுறை
|
தோற்றுவித்த முறைகள் | வட்டெழுத்து |
நெருக்கமான முறைகள் | கரோஷ்டி, பட்டிப்புரலு எழுத்துமுறை |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Brah (300), Brahmi |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Brahmi |
தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.[1] தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழி என்பது தாமிழி என்றும் அழைக்கப்பட்டது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக தமிழி (அல்லது தாமிழி) மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.
தமிழி எழுத்துக்கள் தோன்றிய காலம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த எழுத்துக்கள் கி.மு. 2000 என காலம் கணிக்கப்பட்டது தொடங்கி ஐராவதம் மகாதேவன் கருத்தின் படி அசோகனுக்கு பிந்திய கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலம் என்பது வரை பல கருத்துகள் உள்ளன.
சில ஆரம்ப கால எழுத்துமுறைகள் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய பல பிராமி எழுத்துமுறைகளுள் தமிழ்ப் பிராமி பட்டிப்புரலு எழுத்துமுறைக்கு நெருங்கியதாயுள்ளது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும்.
கொற்கையில் நடந்த அகழாய்வின் படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையோடு ஒன்றும் கிடைத்தது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் பொ.ஊ.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது.[20] பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டு கால தென்னாசிய ஆரம்ப சான்றுள்ள சாசனங்கள் அனுராதபுர அரணில் கண்டுபிடிக்கப்பட்டன.[21][22] அல்சின் கருத்துப்படி, அசோக முன் பிராமி பயணத்திற்கு மேம்பட்டு, வர்த்தகத்தொடர்பினால் தென்னாசியாவிற்குப் பரவியது.[21][23] பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ஊ.மு. 5ம் நூற்றாண்டு கால சாசனம் மற்றும் சில சாசனங்கள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.[24][25][26] அசோகருக்கு பிற்பட்ட பரவல் பற்றி மகாதேவனினால் உருவாக்கப்பட்ட கருத்து அனுராதபுர கண்டுபிடிப்பினால் புறக்கணிக்கப்பட்டது.[27]
இரா. நாகசாமியின் கருத்துப்படியும்,[28] கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படியும்[29] தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியிலிருந்து சுதந்திரமாகத் தமிழகத்தில் மேம்பட்டு, மௌரியப் பேரரசின் தென் பிராமியினையினை சேர்த்துக் கொண்டது. கொனிங்கம் (1996), காசிநாதன் (1995), கே.வி. ரமேஸ், எம்.டி. சம்பத், கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. ராமன் (1976) மற்றும் சிரான் உபேந்திரா (1992) போன்றோர் அசோகருக்கு முன் பிராமி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததென நம்புகின்றனர்.[30] கே. ராஜன் தமிழ்ப் பிராமியின் மூலத்தை அறிய தமிழகத்தினதும் இலங்கையினதும் பொதுவான கலாச்சாரப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நம்புகின்றார்.[30]
பொ.ஊ.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கூடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.[12] இன்னுமெரு பொ.ஊ.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.[13]
பட்டிப்புரலு சாசனம் தற்போதைய ஆந்திராப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முறையாகக் காணப்பட்ட இது, தமிழ்ப் பிராமிக்கு நெருங்கியதாக இல்லை.[31] ரிச்சட் சல்மனின் கருத்துப்படி, பட்டிப்புரலு எழுத்துமுறை திராவிட மொழியினை எழுதக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இந்திய-ஆரிய மொழி பிராக்கிருதத்தினை பொறிக்க மீள் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் பட்டிப்புரலுவும் தமிழ்ப் பிராமியும் பொதுவான மாற்றத்தைக் கொண்டு திராவிட மொழிகளைப் பிரதிபலிக்கின்றன.[32][33] பட்டிப்புரலு எழுத்து தமிழ்ப் பிராமி மொழி பெயர்ப்பின் ரொசெட்டாக் கல் எனவும் கருதப்படுகின்றது.[32] இராவதம் மகாதேவனின் கருத்துப்படி, எழுத்துவடிவம் வளர்ச்சியில் மூன்று படிநிலைகள் காணப்பட்டன. ஆரம்ப நிலை பொ.ஊ.மு. 3ம்/2ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ.மு. 1ம் நூற்றாண்டு வரையானது. இரண்டாம் நிலை பொ.ஊ. 1ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2ம் நூற்றாண்டு வரையானது. கடைசி நிலை பொ.ஊ. 1ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3ம்/4ம் நூற்றாண்டு வரையானது.[34] கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படி, தமிழ்ப் பிராமி எழுத்து தெளிவான காலக்கணிப்பைப் பின்பற்றாது காலம் பற்றிய குழப்பத்திற்து வழியேற்படுத்துகின்றது.[29] கே. ராஜனின் கருத்துப்படி, அசோகப் பிராமி மகாதேவனின் வகைப்படுத்தலின்படியான இரண்டாம் நிலையுடன் தொடர்புபட்டது. ஆயினும் இவர் முதலாம் நிலை முன்மொழியப்பட்ட நேர எல்லையிலிருந்து மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.[30] பொ.ஊ. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்தாகவும் சோழ, பல்லவ நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது.[32] குகை படுக்கைகள், நாணயங்களில் இருந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் சில அரசர்களையும் சங்ககால பிரதானியையும், அசோகரின் தூண்களில் இருந்த எழுத்துக்களையும் அடையாளங் காண உதவியன.[32][35]
தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்களவு தனிப்பண்புகளைக் கொண்டுள்ளது.[31] இது நான்கு வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்டு இந்தோ-ஆரிய பிராக்கிருதம் கொண்டு எழுதப்படும் வட பிராமி போன்றில்லாது திராவிட மொழிச் சூழலை வெளிப்படுத்துகின்றது. இந்திய அபுகிடா எழுத்து முறை செலுத்திய தாக்கத்தினால் அகர வரிசைப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டது. இலங்கையில் வட பகுதி கந்தரோடை முதல் தென் பகுதி திசமகாராமை வரை தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[32]
கல்வெட்டியல் மதிப்பீட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவனின் கருத்திற்கேற்ப சில ஆதாரக் கருத்துக்கள் முன்மொழியப்பட்டன.[36] மகாதேவனின் கருத்துப்படி, தென்னிந்தியாவிலிருந்து சமணமும் பெளத்தமும் பரவியதால் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தை வந்தடைந்தன. பின்னர் தமிழ் ஒலிப்பியல் முறைக்கு ஏற்ப உள்வாங்கப்பட்டன.[37] இக்கருத்தின் ஊகத்தின்படி, பிராமி எழுத்துமுறை பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் மௌரியப் பேரரசு தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரவியபோது கண்டுபிடிக்கப்பட்டது அல்லது தோற்றுவிக்கப்பட்டது. இக்காலம் அசோகனுக்கு பிற்பட்டதாக அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு காலமாக இருக்கலாம்.[37] அகமட் கசன் டனி பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு என்பதை கேள்விக்குட்படுத்தி பொ.ஊ. 1ம் நூற்றாண்டு என்ற கருத்தை முன்வைத்தார். ஆயினும், தே. வே. மகாலிங்கம்[38] மற்றம் ரிச்சட் சல்மன் போன்றோரினால் இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.[36] மதுரை மாவட்டத்திலுள்ள சமணர் மலையில் 2012இல் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டு தமிழ்ப் பிராமி சாசனம் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப் பிராமி பரவலாகப் பாவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றது.[39]
தமிழ்நாட்டில் தொடர்ச்சியான குழப்பமற்ற கலாச்சார அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு, நாணயங்கள் போன்ற பல செயற்கைப் பொருட்கள் பாறைப்படிவியல் காலத்தை அடிப்படையாகக் கொண்டவை.[30] அடியில் காணபப்ட்ட அடுக்குகளைவிட மேலே காணப்பட்ட அடுக்குகள் காலத்தில் குறைந்தவை. ஆயினும் அடுக்குகளின் தொடர்ச்சி அண்மித்ததிலிருந்து தற்காலக்கு தொடர்புபட்ட காலவரிசையான தொடர்வரிசையினைத் தருகின்றது.[30] கொடுமணலில் கீழ்மட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரியது என பகுப்பாய்வில் கண்டுகொள்ளப்பட்டன.[30] கீழ்மட்ட மட்பாண்ட ஓடு தமிழுக்குரிய எழுத்துக்களையும் "m" போன்ற வேறுபட்ட தொல்லெழுத்தியல் வடிவத்தினையும் கொண்டிருந்தது. மேலும், பேச்சொலி, மெய்யொலி, உயிர் உச்சரிப்பு, சீறொழி விலக்கல் தமிழ்ப் பிராமியில் காணப்பட்டன. கொங்கு நாட்டு கொடுமணலில் மட்டும் இந்கிகழ்வு வரையறுக்கப்படாது தமிழ்நாடு, கேரளா, இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாடு வரையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்பட்ட எழுத்துமுறையின் பரிணாமம், சீரான உள்வாங்கல் என்பன பரவலாகியது என கருதப்படுகின்றது. கே. ராஜன் கருத்துப்படி, தமிழ்நாட்டில் எழுத்துமுறையின் அறிமுகம் அல்லது பரிணாமம் அல்லது மூலம் என்பன அதன் ஒருமைப்பாடு, இலக்கண பிழை இண்மை மற்றும் பரவலான பயன்பாடு என்பவற்றால் பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம்.[30]
பல எழுத்துப்பொறிப்புகளின் காலங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் உள்ளன. ஆயினும் இலக்கிய, கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்பொருள் சான்றுகள் பல கருத்துக்களை முன் வைக்கின்றன. சிலரது கருத்துக்கள் தமிழி அசோகருக்கு முற்பட்டது எனவும், சிலரது கருத்துக்கள் அசோகருக்குப் பிற்பட்டது எனவும் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாகப் பின்னர் உருமாறின.
பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று.[40] அடுத்தது சமண நூல்களான சமவயங்க சுத்தா (பொ.ஊ.மு. 300), பன்னவயன சுத்தா (பொ.ஊ.மு. 168) என்பனவற்றில் தமிழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[41] பெளத்த நூலான "லலிதவிஸ்தர" (புத்தரின் பிறப்பைக் கூறும் இது பொ.ஊ. 308 இல் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது) திராவிடலிபி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[34][41] கமில் சுவெலபில் திராவிடலிபி, தமிழி என்பன தமிழ் எழுத்துமுறைக்கான ஒரே பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார்.[41] எழுத்துமுறைத் தொடர்பு ஆரம்ப தமிழ் இலக்கியத்தில் உள்ளது. தொல்காப்பிய செய்யுள் 16 மற்றும் 17 மெய்யொலிக்கு புள்ளி சேர்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய ஆசிரியர் அவருக்குத் தெரிந்த எழுத்துமுறை, படமுறை பற்றித் தெரிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குறள் "எழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது.[41] சிலப்பதிகாரம் "கண்ணெழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது. இது துறைமுக வணிக மையமான காவிரிப்பூம்பட்டினத்தில் விற்பனைப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அடையாளமிடப்பட பயன்படுத்தப்பட்டது. "கண்ணெழுத்தாளர்" (எழுத்தர்) என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.[41] நாலடியார், புறநானூறு ஆகிய எழுத்தோலைகளில் நடுகல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு அடிப்படையில், தமிழர் குறைந்தது பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து எழுத்துமுறை பற்றி அறிந்திருந்தனர் என கமில் சுவெலபில் நம்புகின்றார்.[41]
அசோகப் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காகப் புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறுபடுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும். இந்த முறைமை தனித்தமிழ் எழுத்து முறைமை எனக் கூறப்படுகிறது.
பழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதன் காலத்தை அமெரிக்க நிறுவனம் பொ.ஊ.மு. 490 என்று கணித்துள்ளது. இதனால் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அசோகப் பிராமிக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இது பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[42]
தமிழ்ப் பிராமிப் பயன்பாடு சமண மதத்தினருடன் தொடங்கியது அல்லது மக்கள் நீண்ட காலமானப் பயன்படுத்தி வந்தனர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மொழிபெயர்ப்பு விளக்கமளிப்பவர் எழுத்துப் பயன்பாடு சமய விடயங்களுக்கு ஆரம்பத்தில் தடையாகவிருந்தது என நம்புகின்றனர். ஆயினும் தொல்பொருளியலாளர்கள் ஆரம்ப எழுத்துமுறை குத்துக்கல், நடுகல் மற்றும் மரண சாம்பல் கலசங்களில் உள்ளவாறு இயற்கையாகக் காணப்பட்டது என ஏற்றுக் கொள்கின்றனர்.[43] ஆயினும் இதனுடைய ஆரம்பம் அரசர்கள், தளபதிகள், குயவர் மற்றும் கள்ளு உற்பத்தியாளுடன் வேகமாப் பரவி, வணிகர் பாவணை இதனை தமிழகத்திலும் வெளியிலும் பரவச் செய்தது.[44][45]
தொல்பொருளியல் தேடல்களின்படி, எழுத்துவடிவம் இறுதிச் சடங்கு மற்றும் ஏனைய தேவைகளான பல்வேறுபட்ட சமயப் பிரிவினரில் திகதி குறித்தல் பயன்பாட்டிற்காகப் பெருங்கற்கால குறியீடுகளுடன் பயன்படுத்தப்பட்டது.[30] சமய சாசனங்களில் தமிழ் இலக்கணக்காரர்களால் உருவாக்கப்பட்ட பிராகிருதம் மூலங்கள் அற்று மொழி பயன்பட்டது.[46][47] சில ஆரம்பகால சாசனங்கள் இன்றைய கருநாடகத்தின் கன்னட மொழி தாக்கத்தினைக் காட்டுகின்றது. இது கிராம, நகர்ப்புறங்களில் வேறுபட்ட சமூக வகுப்பினரிடையே பயன்பாட்டிலிருந்த இடைக்கால தென்னாசிய ஏனைய எழுத்துக்களிலிருந்து வேறுபட்டது.[32][48]
தமிழ்ப் பிராமி தனியான எழுத்து முறையாக 20ம் நூற்றாண்டின் மத்தி வரை மொழி பெயர்ப்பு விளக்கம் பெறவில்லை. அதுவரைக்கும் இது பிராக்கிருத பிராமி எழுத்துமுறையாகக் கருதப்பட்டது. பொ.ஊ. 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தென்னிந்திய சாசனங்களின் கிரந்த, வட்டெழுத்து, தேவநாகரி, தமிழ் எழுத்துக்களை மொழி பெயர்த்து விளக்கமளிப்பதும், எழுத்துக்களின் தற்கால வடிவங்களின் தோற்ற ஒற்றுமையில் அவற்றின் வளர்ச்சி நிலைகளை விளக்குவதும் ஆரம்ப பிராமி எழுத்துக்களைவிட இலகுவானதும் சிறப்பானதும் ஆகும். ஆரம்ப பிராமி சாசனங்கள் பிராக்கிருதத்திற்கு பயன்பட்ட பிராமியின் வேறுபாடுகளான வழக்கொழிந்த எழுத்துக்கள், எழுத்துக்கூட்டுமுறை விதிகள் என்பன பாரிய சவாலை ஏற்படுத்தின.[32]
ஏ.சி. புரூனல் (1874) தென்னிந்திய தொல்லெழுத்தியல் ஆரம்ப படைப்புக்கள் பற்றி ஆராய முயற்சித்தார், ஆயினும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் (1924), எச். கே. கிருஸ்ன சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகியோர் ஆரம்ப வடிவம் பிராக்கிருதத்தில் அல்ல தமிழல் எழுதப்பட்டது என்பதை கண்டுகொண்டனர்.[35] ஆரம்ப முயற்சிகள் உண்மையாக என்ன பயன்பட்டன என்பதைவிட்டு அதிக பிராக்கிருத சொற்கள் உள்வாங்கப்பட்டன என ஊகிக்கப்பட்டது. ஆயினும் மொழி பெயர்ப்பு விளக்கம் முற்றிலும் வெற்றியடையவில்லை. இ. மகாதேவன் அதிக தமிழ்ச் சொற்கள் உள்ளடங்கப்பட்டதை அடையாளங் கண்டு 1960களில் கருத்தரங்குகளில் தெரிவித்தார்.[32][35] இது மேலும் ரி.வி. மகாலிங்கம் (1967), ஆர். நாகசுவாமி (1972), ஆர். பன்னீர்ச்செல்வம் (1972), எம். எஸ். வெங்கடசாமி (1981) ஆகியோரால் விரிபுபடுத்தப்பட்டன.[34]
தற்காலக் கணினிப் பயன்பாட்டிற்கேற்ப சில தமிழ்ப் பிராமி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கணினியில் நிறுவுவதன் மூலம் இயல்பான ஒருங்குறி எழுத்தை பிராமி வடிவில் காணமுடியும்.[49][50]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Unknown parameter |coauthors=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: Check |isbn=
value: checksum (help)CS1 maint: multiple names: editors list (link)