தானா மேரா (P027) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Tanah Merah (P027) Federal Constituency in Kelantan | |
தானா மேரா மக்களவைத் தொகுதி (P027 Ketereh) | |
மாவட்டம் | தானா மேரா கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 99,213 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | தானா மேரா தொகுதி |
முக்கிய நகரங்கள் | தானா மேரா, புக்கிட் பானாவ், குவால் ஈப்போ, கெமகாங் |
பரப்பளவு | 687 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இக்மால் இசாம் அசீஸ் (Ikmal Hisham Aziz) |
மக்கள் தொகை | 126,470 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தானா மேரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ketereh; ஆங்கிலம்: Ketereh Federal Constituency; சீனம்: 格底里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், தானா மேரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P027) ஆகும்.[8]
தானா மேரா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து தானா மேரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
தானா மேரா மாவட்டம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். தானா மேரா நகர்ப்புறப் பகுதி கிளாந்தான் ஆற்றின் வழியாக அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் வடக்கில் பாசீர் மாஸ் மாவட்டம்; கிழக்கில் மாச்சாங் மாவட்டம்; தென் கிழக்கில் கோலா கிராய் மாவட்டம்; தென் மேற்கில் ஜெலி மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தாய்லாந்து நாடு மேற்கில் உள்ளது.
சேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு முன்னர் காலத்தில் தானா மேரா மாவட்டத்தில் இருந்தது. அந்த அரசு சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு ஆகும்.[10]
சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[11] கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது.
தானா மேரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் தானா மேரா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P023 | 1959–1963 | ஒசுமான் அப்துல்லா (Othman Abdullah) |
மலேசிய இசுலாமிய கட்சி |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P023 | 1963–1964 | ஒசுமான் அப்துல்லா (Othman Abdullah) |
மலேசிய இசுலாமிய கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | முசுதபா அகமது (Mustapha Ahmad) | ||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[12][13] | |||
3-ஆவது மக்களவை | P023 | 1971–1973 | முகமட் யாக்கோப் Mohamed Yaacob |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | 1974–1978 | |||
5-ஆவது மக்களவை | 1978–1982 | உசேன் மகமுட் (Hussein Mahmood) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P026 | 1986–1990 | அசீம் சாபின் (Hashim Safin) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | இப்ராகிம் படே முகமது (Ibrahim Pateh Mohammad) |
செமாங்காட் 46 | |
9-ஆவது மக்களவை | P027 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | சாபி தாவூத் (Saupi Daud) |
மாற்று முன்னணி (கெஅடிலான்) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சாரி அசன் (Shaari Hassan) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அம்ரான் கனி (Amran Ab Ghani) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | இக்மால் இசாம் அசீஸ் (Ikmal Hisham Aziz) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2019 | சுயேச்சை | |||
2019–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
98,782 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
70,667 | 71.34% | ▼ - 10.11% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
69,686 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
624 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
161 | ||
பெரும்பான்மை (Majority) |
4,498 | 63.83% | + 58.79 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[14] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | இக்மால் இசாம் அசீஸ் (Ikmal Hisham Aziz) |
69,686 | 54,279 | 77.87% | + 34.47% | |
பாரிசான் நேசனல் | முகமட் பக்ரி முசுதபா (Mohd Bakri Mustapha) |
- | 9,781 | 14.04% | - 34.40% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | முகமது சுபர்டி நூர் (Mohamad Supardi Md Noor) |
- | 5,357 | 7.69% | - 0.48 % ▼ | |
பூமிபுத்ரா கட்சி | நசீர் அப்துல்லா (Nasir Abdullah) |
- | 168 | 0.24% | + 0.24% | |
சுயேச்சை | நிக் சபேயா நிக் யூசோப் (Nik Sapeia Nik Yusof) |
- | 114 | 0.16% | + 0.16% |