தாரோஜி எர்ரம்மா | |
---|---|
பிறப்பு | 1930 |
இறப்பு | 12 ஆகத்து 2014 பெல்லாரி, கருநாடகம், இந்தியா | (அகவை 83–84)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | புர்ரகதை எர்ராம்மா |
பணி | நாட்டர் வழக்காற்றியல் பாடகர், நடிகர் |
அறியப்படுவது | பர்ர கதை |
தாரோஜி எர்ரம்மா, பேர்பெற்ற புர்ரகதை (1930-12 ஆகஸ்ட் 2014) என அறியப்படும் ஒரு நாட்டடார் வழக்காற்றியல் பாடகர், நடிகை. புர்ரகதை என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற காவிய கதை கலை வடிவம் அவருக்கு 1999இல் இராஜ்யோத்ஸவ பிரசஸ்தி உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன.
எர்ரம்மா அரை நாடோடி படுகா சனகம்மா என்னும் ஒரு பட்டியல் பழங்குடி சமுகத்தினைச் சார்ந்தவர். இவர் 1930ஆம் ஆண்டு பிறந்தார். இளம் பருவத்திலேயை தனது தந்தை லாலப்பாவிடமிருந்து புர்ரகதையைக் கற்றுக்கொண்டார். இவர் இந்த நாட்டுப்புற கலை வடிவத்தினை தனது குடும்பத்தினர், தன் சமூகத்தினருக்கும் கற்றுக்கொடுத்தார்[1].
இவரின் பங்களிப்புகளில் இவருடன் இவரது சகோதரி சிவம்மாவும், இவரது மைத்துனி பர்வதாமா ஆகியோர் தாள வாத்தியத்தில் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் எர்ரம்மா ஒரு கையால் ஒரு சரம் வாசிப்பதை வாசித்துக்கொண்டே மறுபுறம் மணியடிப்பார். இவர் போலியோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கேற்றுள்ளார்.[2] இவர் ஆகஸ்ட் 12, 2014 அன்று கருநாடகாவின் பெல்லாரியில் இறந்தார். இவரது இறுதி சடங்குகள் பெல்லாரி மாவட்டத்தின் சந்தூர் வட்டத்தில் உள்ள இவரது சொந்த ஊரான தரோசியில் நிகழ்த்தப்பட்டன.[3]
தாரோஜி எர்ரம்மா 1999இல் இராஜ்யோத்சவ பிரச்சுதியையும் கர்நாடக அரசு நிறுவிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விருதினையும் பெற்றுள்ளார். கலை நாட்டார் வழக்காற்றியல் சார்ந்து இவர் செய்த பங்களிப்புக்காக 2003ஆம் ஆண்டில் சந்தேசா கலை விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4] அம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தின் பழங்குடி ஆய்வுகள் துறை, 2003இல் நாடோசா விருதை வழங்கினார்கள். பிரசார் பாரதி 2010இல் சிறந்த நாட்டுப்புற கலைஞர் விருதை வழங்யது. இவர் 2012இல் 2010ஆம் ஆண்டின் சனபாதா சிறீ என்னும் விருதினைப் பெற்றுள்ளார்.
அம்பி பல்கலைக்கழக மாணவர் எல். சரிகாதேவி, 2006ஆம் ஆண்டு எர்ர்ரமா குறித்த முனைவர் பட்ட ஆய்வேட்டினை எழுதியுள்ளார், இது எர்ரமாவையும் அவரது செயற்பாடுகளையும் மக்களுக்கு கொண்டு செல்ல உதவியது.[5] இவரது சில நடிப்புகளை கன்னட பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய அறிவுத்துறை அறிஞர் சலவராசூ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.[6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)