திப்ரா மோதா கட்சி | |
---|---|
Tipra Logo.jpg | |
சுருக்கக்குறி | TIPRA / TMP |
தலைவர் | பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா பார்மன் |
தலைவர் | விஜய் குமார் ஹரங்கா |
தலைவர் | பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா தேவ் பார்மன் |
நிறுவனர் | பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா தேவ் பார்மன்[1] |
குறிக்கோளுரை |
|
தொடக்கம் | 2019 |
தலைமையகம் | மாணிக்கிய அரச குல அரண்மனை, அகர்தலா, திரிபுரா, 799001 |
மாணவர் அமைப்பு | திப்ரா பூர்வகுடி மாணவர்கள் கூட்டமைப்பு |
இளைஞர் அமைப்பு | திப்ரா இளைஞர் கூட்டமைப்பு |
பெண்கள் அமைப்பு | திப்ரா மகளிர் கூட்டமைப்பு |
கொள்கை | தனி திப்ராலாந்து மாநிலம், திரிபுரி தேசியம்[2] அகண்ட திப்ராலாந்து[2] தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு ஆதரவு |
நிறங்கள் | |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (திரிபுரா சட்டமன்றம்) | 13 / 60 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு) | 18 / 30 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
Unofficial flag of Tripura.png | |
இந்தியா அரசியல் |
திப்ரா மோதா கட்சி அல்லது திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி (Tipraha Indigenous Progressive Regional Alliance (சுருக்கமாக: TIPRA) வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் பூர்வகுடி மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான அரசியல் கட்சியாகும் . கூட்டமைப்ப்பாகும்.[3][4][5] இதன் நிறுவனத் தலைவர் கீர்த்தி பிரத்யோத் தேவ் பார்மன்[6][7] மற்றும் தலைவர் விஜய் குமார் ரங்காவ் ஆவார்.
28 நவம்பர் 2021ல் நடைபெற்ற 28 திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுக்களுக்கான தேர்தலில் இக்கட்சி 16 மாவட்ட தன்னாட்சி குழுக்களையும், இதன் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 2 மாவட்டக் குழுக்களையும் கைப்பற்றியது. [8]
தேசியக் கட்சிகளுடன் கூட்டணியின்றி போட்டியிட்ட இக்கட்சி இந்தியப் பொதுவுடமை கட்சிகளின் திரிபுரா இடது முன்னணியை வீழ்த்தி சாதனை படைத்தது.[9]
இக்கட்சி முதன்முதலாக 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து 42 தொகுதிகளில் போட்டியிட்டு 13 தொகுதிகளைக் கைப்பற்றி, திரிபுராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.[10]