திப்ரி என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மற்றும் ஹரியானாவின் அம்பாலா ஆகிய இடங்களில் பிரபலமாக ஆடப்படும் ஒரு வகை கம்பு நடனம் ஆகும்.[1]
திப்ரி நடனம் தண்டாரஸ் என்ற நடனத்தின் நீட்சியாக கருதப்படுகிறது. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் பா குகை சுவற்றின் ஓவியங்களில் திப்ரியின் தொன்மை நடன வடிவத்துடன் பெண் கனமான குச்சிகளுடன் ஆடுவது போன்றும், கைகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆடுவது போன்றும் வரையப்பட்டிருக்கின்றன.[2] ரந்தாவா (1960) கருத்துப்படி, சிறுவர்கள் மற்றும் ஆண்கள் சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி திப்ரி நடனத்தை ஆடுகின்றனர். நடனக்கலைஞர்கள் வட்டமான அமைப்பில் நின்று கொண்டு குச்சிகளைத் தட்டி நடனமாடுகிறார்கள். மற்றொரு வகையில் நடனக் கலைஞர்கள் ஒரு கயிற்றைப் பிடித்து கம்பத்தில் கட்டி விட்டு மறுமுனையை ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிடித்து பிற நடனக் கலைஞர்களின் கயிறுகளால் கயிற்றை நெய்கிறார்கள். ஆண் நடனக் கலைஞர்கள் குச்சிகளை அடிக்கும் போது கயிறுகளில் ஏற்பட்ட பின்னல்கள் விடுபடுகின்றன. இந்த நடனம் பாட்டியாலா நகரத்தின் உள்ளூர் பாரம்பரிய நடனம் என்றும் பம்பாயின் (மும்பை) தண்டியா மற்றும் ராஜஸ்தானின் திப்னி தடனத்தைப் போன்றது என்று ரந்தாவா கூறுகிறார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நடனம் வட்ட நடனமாகவும் ஆடப்படுகிறது. [3]
ஜேம்ஸ் (1974) என்பவா் விளக்கும் டிப்ரியின் மற்றொரு பாணி நடனத்தில் சிறிய தடி அல்லது குச்சியைப் பயன்படுத்தி சிறுமிகளால் நடனமாடப்படுகிறது, குச்சிகள் ஒரு வகையான தாளத்தை உருவாக்க தட்டப்படுகின்றன. நடனத்தின் போது எந்த பாடலும் பாடப்படுவதில்லை.[4] தில்லான் (1998) என்பவா் டிப்ரியின் மற்றொரு பாணியைப் பற்றி கூறுகிறார் அதன் படி நடனக் கலைஞர்கள் இரண்டு குச்சிகளைக் கொண்டு நடனத்தை ஆடுகின்றனா்.. ஒவ்வொரு நடனக் கலைஞரும் தாங்கள் வைத்திருக்கும் குச்சிகளை தாங்களே அடித்துக் கொள்கின்றனர். பின்னர் மற்ற நடனக் ஒரு வட்டத்தில் நகர்ந்து உடலசைவின் மூலம் இந்த நடனத்தை ஆடுகின்றனர்.. இருப்பினும், திப்ரியின் இந்த வடிவம் முல்தான், பஹவல்பூர் மற்றும் பாக்கிஸ்தானின் வடமேற்கு பஞ்சாபில் பிரபலமான தண்டராஸ் எனப்படும் நடனத்தின் மற்றொரு பெயர் ஆகும். [5]
“பவன் தேவதாசி” என்பது இந்து கடவுளான வாமனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருவிழா. பத்ராவின் சந்திர மாதத்தில் இந்த விழா நடைபெறுகிறது. 2000 ஆம் ஆண்டில் சிங் என்பவா் பின்வருமாறு எழுதுகிறார், "குஜராத்தின் தாண்டியாவின் உள்ளூர் வடிவமாக திப்ரி மற்றும் பாட்டியாலா மற்றும் அம்பாலா மாவட்டங்களின் சிறப்பியல்புகளைக் கொண்ட இது தனது பிரபலத்தை இழந்து வருகிறது.அதன் நிகழ்ச்சிகள் இப்போது பவன் தேவதாசி திருவிழா சந்தர்ப்பங்களோடு மட்டுப்படுத்தப்படுகின்றன. "சிங் (2000) கருத்துப்படி," பவன் தேவதாசி என்பது பாட்டியாலா மற்றும் அம்பாலா மாவட்டங்களில் மட்டுமே கொண்டாடப்படும் ஒரு உள்ளூர் விழா. வேறு எங்கும், மக்கள் அதை அறிந்திருக்க மாட்டார்கள். இப்போது, இந்த திருவிழாவின் போது மட்டுமே திப்ரி நடனம் ஆடப்படுகிறது. "பவன் தேவதாசி" என்பது விஷ்ணுவின் வெற்றியைக் கொண்டாடுவதாகும் என்று சிங் கூறுகிறார். திருவிழாக்களின் போது திப்ரி போட்டிகள் நடத்தப்படுகின்றன. நடனக் கலைஞர்கள் இரட்டைகளாக குச்சிகளைத் அடித்து கயிறுகளைகொண்டு ஒரு தாளத்தை உருவாக்கி ஆடுகிறார்கள்.[6]