தியோ நதி Deo River | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | சார்க்கண்ட் |
உற்பத்தியாகும் இடம் | காம்காரியா பீடபூமி |
கழிமுகம் | |
- அமைவிடம் | தெற்கு கரோ ஆறு |
தியோ நதி (Deo River) என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டம் வழியாகப் பாய்கின்ற ஒரு நதியாகும்.[1] காம்காரியா பீடபூமியின் மேற்கு திசையில் உற்பத்தியாகும் இந்நதி 56 கிலோமீட்டர் தொலைவிற்குப் பாய்ந்து பின்னர் தெற்கு கரோ ஆற்றில் கலக்கிறது. சந்தாரா காட்டுப் பகுதியிலிருக்கும் ஒரு மிதமான அளவுள்ள புயில்கரா மலையோடையிலிருந்து தியோநதி தண்ணீரைப் பெறுகிறது [2][3].