திரிகூடக வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுமார் 388 பொ.ச.–சுமார் 456 பொ.ச. | |||||||||||
தர்சேனனின் வெள்ளி நாணயம்.
Obv:மன்னனின் மார்பளவு. Rev: சைத்தியமும் நட்சத்திரமும். பிராமி எழுத்துமுறை: "விஷ்ணுவின் முதன்மையான பக்தனும் மன்னன் இந்திரதத்தனின் மகனுமான தரசேனன்.[1] | |||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் பிராகிருதம் | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
வரலாறு | |||||||||||
• நிறுவப்பட்டது | சுமார் 388 பொ.ச. | ||||||||||
• முடிவிற்கு வந்தது | சுமார் 456 பொ.ச. | ||||||||||
|
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
திரிகூடக வம்சம் ( Traikutaka dynasty ) பொ.ச.388-க்கும் 456 -க்கும் இடையில் ஆட்சி செய்த வம்சமாகும். திரிகூடர்கள் என்ற பெயர் மூன்று சிகரங்களைக் கொண்ட மலையின் ("திரி-கூடம்") வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது. காளிதாசனின் இரகுவம்சத்தில் திரிகூடகங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் அவை வட கொங்கண் பகுதியில் அமைந்திருந்தன. திரிகூடகர்களின் ஆதிக்கத்தில் அபரந்தா மற்றும் வடக்கு மகாராட்டிரம் ஆகியவை அடங்கும்.[2]
திரிகூடர்களின் நாணயங்கள் தெற்கு குசராத்து மற்றும் தெற்கு மகாராட்டிர மலைத்தொடர்களுக்கு அப்பால் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றின் வடிவமைப்பு மேற்கு சத்ரபதிகளின் வடிவமைப்பிற்கு மிக அருகில் உள்ளது. அதிலிருந்து இவர்கள் ஒருவேளை சில பிரதேசங்களைப் பெற்றிருக்கலாம், மேலும் கிரேக்க எழுத்துக்களுடன் கூடிய மேற்கத்திய புராணத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. [3]
அபரந்தா அல்லது கொங்கணின் திரிகூட ஆட்சியானது கிபி 248 இல் (திரிகூட சகாப்தம்) அபிரா ஈஸ்வர்சேனன் ஆட்சியிலிருந்து தொடங்குகிறது. எனவே திரிகூடர்கள் அபிராவின் வம்சத்துடன் அடையாளம் காணப்படுகின்றனர்.[4]
249-இல் தொடங்கி, திரிகூட சகாப்தம் அல்லது வழக்கமாக காலச்சூரி அல்லது சேதி சகாப்தம் என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தில் இவர்கள் கணக்கிடப்பட்டனர்.
திரிகூடகர்கள் அபிராவின் வேறுபட்ட வம்சத்தினர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.[5][6][7] எனவே சில சமயங்களில் அபிரா -திரிகூடர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.[8] இந்திரதத்தன், தக்ரசேனன், வியாக்ரசேனன் ஆகியோர் இந்த வம்சத்தைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட மன்னர்கள் ஆவர்.[9] மன்னன் தகரசேனன் தனது சாம்ராச்சியத்தை விரிவுபடுத்தினான். அது விரைவில் வாகாடக சாம்ராச்சியத்தின் எல்லையாக இருந்தது. இது மோதலுக்கு வழிவகுத்தது. மேலும், அவரது மகனும் பட்டத்து இளவரசருமான பிருதிவிசேனனின் உதவியுடன் வாகடக மன்னர் நரேந்திரசேனன், ஒருவேளை திரிகூடர்களை தோற்கடித்திருக்கலாம், பின்னர் பிருதிவிசேனனின் கல்வெட்டுகள் "தனது குடும்பத்தின் மூழ்கிய அதிர்ஷ்டத்தை" இரண்டு முறை மீட்டதாகக் குறிப்பிடுகின்றன.[10]
திரிகூடர்கள் தங்கள் வைணவ நம்பிக்கைக்காக அறியப்பட்டனர். அவர்கள் தங்களை ஹேஹேய கிளையின் யாதவர் என்று கூறிக் கொண்டனர். [11] [12] தரசேனன் அசுவமேத யாகத்தை செய்தார்.[5][13] மகாராஜா மத்யமசேனனின் ஆட்சியின் போது, வாகாடக மன்னன் அரிசேனனால் இராச்சியம் படையெடுக்கப்பட்டது.[5] [14] கி.பி 550 இல், கடைசியாக அறியப்பட்ட மன்னரான விக்ரமசேனன் இறந்தபோது வம்சம் முடிவுக்கு வந்தது. [14] திரிகூடகர்கள் விஷ்ணுகுந்திகளின் கீழ் ஒரு அடிமை நிலைக்கு குறைக்கப்பட்டிருக்கலாம். மேலும் முதலாம் மாதவவர்மனின் அதிகாரத்தை ஏற்க வேண்டியிருந்தது. [14]
குப்தர் காலத்து நாணயங்களாலும், கல்வெட்டுகளில் இருந்தும் பின்வரும் திரிகூடக ஆட்சியாளர்கள் அறியப்படுகின்றனர்-
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)