![]() | |
குறிக்கோளுரை | கண்ணுடைய ரென்பவர் கற்றோர் |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 2002 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | டி. ஆறுமுகம்[2] |
அமைவிடம் | , , 13°01′46″N 79°12′40″E / 13.0295°N 79.2110°E |
வளாகம் | நகர்ப்புறம் (112 ஏக்கர்) |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (UGC) |
இணையதளம் | www.thiruvalluvaruniversity.ac.in |
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (Thiruvalluvar University) என்பது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். அக்டோபர் 16, 2002 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம், 2002 (தமிழ்நாடு சட்டம் 32 -2002) கீழ் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. அதன் பின்னர் வேலூரை அடுத்த சேர்க்காட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ளது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றன.
தொடக்கத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பிற்கான விரிவாக்க/நீட்சி மையமாக வேலூர் கோட்டை வளாகத்தில் செயற்பட்டு வந்தது. பின்னர்ப் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப்பட்டது.