திலக் மாரப்பன

திலக் மாரப்பன
Tilak Marapana
சட்டம், ஒழுங்கு, மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்களுக்கான அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 9 நவம்பர் 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
முன்னையவர்சந்திரிக்கா குமாரதுங்க
பின்னவர்சாகல ரத்நாயக்கா, தே. ம. சுவாமிநாதன்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் வான்பறப்பியல் அமைச்சர்
பதவியில்
2002 – ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்காமினி அத்துக்கோரளை
பின்னவர்?
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001 – நவம்பர் 2003
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா குமாரதுங்க
பின்னவர்சந்திரிக்கா குமாரதுங்க
36வது சட்டமா அதிபர்
பதவியில்
சூலை 1992 – ஆகத்து 1994
குடியரசுத் தலைவர்ஆர். பிரேமதாசா
டி. பி. விஜயதுங்க
சந்திரிக்கா குமாரதுங்க
முன்னையவர்சந்திரா டி சில்வா
பின்னவர்சிப்லி அசீசு
36வது Solicitor General of Sri Lanka
பதவியில்
1990–1992
குடியரசுத் தலைவர்ஆர். பிரேமதாசா
முன்னையவர்எஸ். டபிள்யூ. பி. வதுகோதப்பிட்டிய
பின்னவர்சிப்லி அசீசு
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஆகத்து 2015
பதவியில்
2001–2005
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்ஸ்டேல்லா மாரப்பன
பிள்ளைகள்ஜானக்க
சமித்
வாழிடம்இரத்தினபுரி
முன்னாள் கல்லூரிபுனித தோமையர் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

திலக் மாரப்பன (Tilak Marapana) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். சட்டம், ஒழுங்கு, மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராகவும், பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் பதவி வகித்தவர்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

மாரப்பன இரத்தினபுரியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி பி. மாரப்பனவின் மகன் ஆவார். கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் வேதியியல், கணிதம், மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.[2]

சட்டப் பணி

[தொகு]

மாரப்பன இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.[2] 1988 இவர் சனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.[2] 1992 முதல் 1994 வரை சட்டமா அதிபராகப் பணியாற்றினார்.[3]

அரசியலில்

[தொகு]

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2002 இல் போக்குவரத்துத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. 2015 இல் தேசியப் பட்டியலில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] மைத்திரிபால சிறிசேனவின் அரசில் இவருக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர் பதவி 2014 செப்டம்பர் 4 இல் வழங்கப்பட்டது. இவர் அவன்காட் (மிதக்கும் ஆயுதக்கப்பல்) விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளையடுத்து 2015 நவம்பர் 9 இல் பதவி விலகினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Malalasekera, Sarath. "Another 'gem' new Defence Minister". டெய்லி நியூசு. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2013.
  2. 2.0 2.1 2.2 Another 'gem' new Defence Minister
  3. Wimalasurendre, Cyril. "Cases against Diyawadane Nilame stayed". the island.lk. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொறுப்பேற்றார்". பிபிசி. 11 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2015.