இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
திஷானி தோஷி | |
---|---|
புரூக்ளின் புத்தக விழாவில் திஷானி தோஷி | |
பிறப்பு | 9 திசம்பர் 1975 சென்னை, இந்தியா |
தொழில் | பாடலாசிரியர், எழுத்தாளர், நடன மங்கை |
இணையதளம் | |
www |
திஷானி தோஷி (Tishani Doshi) சென்னையைச் சேர்ந்த ஓர் இந்தியக் கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் நடன மங்கை ஆவார்.
திஷானி தோஷி, இந்தியாவில் உள்ள மெட்ராஸ் நகரத்தில் வெல்ஷ் தாய் மற்றும் குஜராத்தி தந்தை ஆகியோருக்கு 1975 ல் திசம்ம்ப்பாற் 9 ஆம் நாள் பிறந்தார்.[1] இவர், 2001இல் கவிதைக்கான எரிக் கிரிகோரி விருது பெற்றார். இவரது முதல் கவிதை தொகுப்பு, "கன்ட்ரீஸ் ஆஃப் த பாடி" 2006இல் ஃபார்வர்ட் பொயட்ரி பரிசு வென்றது.[2] 2006 ஆம் ஆண்டின் கார்டியன் ஸ்பான்சர் ஹே ஃபெஸ்டிவல் மற்றும் 2007 ஆம் ஆண்டின் கார்டகெனா ஹே விழாவின் கவிதை அரங்கிற்கு இவர் அழைக்கப்பட்டார். அவருடைய முதல் புதினம், " த ப்ளெசர் சீக்கர்ஸ்" ப்ளூம்ஸ்பரி நிறுவனத்தால் 2010இல் வெளியிடப்பட்டது. மற்றும் ஆரஞ்சு பரிசு 2011 பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.[3] தி இந்து சிறந்த கதை விருதுக்காக 2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிரிக்கெட்டோவில் ,[4] ஒரு கிரிக்கெட் தொடர்பான வலைத்தளத்தில் "ஹிட் அல்லது மிஸ்" என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை எழுதுகிறார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் எழுதியதில், திஷானி தோஷி இந்திய பிரீமியர் லீகின் இரண்டாம் பருவத்தின் ஒரு தொலைக்காட்சி பார்வையாளராக தன் அவதானிப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டார். இவர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றினார்.[5]
அவர் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராகப் பணிபுரிகிறார் மற்றும் டிசம்பர் 2006 வரை நடனக்கலைஞர் சந்திரலேகாவுடன் பணிபுரிந்தார்.[6] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் படைப்பாக்க எழுத்துகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
"கன்ட்ரீஸ் ஆஃப் த பாடி" 2006 இல் ஹே-ஆன்-வை-விழாவில் சீமாஸ் ஹேனே, மார்கரெட் அட்வுட் மற்றும் பலரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தொடக்கக் கவிதையான, "த டே வி வென்ட் டு த சி", 2005 ஆம் ஆண்டு பிரித்தானிய கவுன்சிலின் அனைத்து இந்திய கவிதைகள் போட்டியில் வெற்றி பெற்றது; மேலும், இவர் அவுட்லுக்-பிகாடார் நான் ஃபிக்ஷன் போட்டியில் ஒரு இறுதிப் போட்டியாளராக இருந்தார்.
அவரது சிறுகதையான "லேடி கஸ்ஸாண்ட்ரா, ஸ்பார்டகஸ் மற்றும் டான்ஸிங் மேன்" 2007 ஆம் ஆண்டில் த டிராப்பிரிட்ஜ் இதழில் முழுமையாக வெளியிடப்பட்டது.[7]
அவரது கவிதை தொகுப்பான "எவரிதிங் பிகின்ஸ் எல்ஸ்வேர்" [8] 2013 இல் காப்பர் கனியன் பிரஸ் ஆல் வெளியிடப்பட்டது.
அவரது சமீபத்திய கவிதைப் புத்தகம், "கேர்ள்ஸ் ஆர் கமிங் அவுட் ஆஃப் த வூட்ஸ்" ,[9] ஹார்பர் காலின்ஸ் இந்தியாவால் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.