வகை | நாளிதழ் |
---|---|
வெளியீட்டாளர் | முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் |
ஆசிரியர் | விஜய் பன்சிகர் |
தலைமை ஆசிரியர் | பன்வாரிலால் புரோகித் |
நிறுவியது | 1911 |
அரசியல் சார்பு | வலதுசாரி |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | தி கிட்டாவாடா, பண்டிட் ஜவகர்லால் நேரு மார்க், நாக்பூர் - 12 |
இணையத்தளம் | www |
கிட்டாவாடா (The Hitavada) என்பது ஒரு ஆங்கில நாளிதழாகும். இது முக்கியமாக இந்தியாவின் மத்திய பகுதிகளில் பரவலாக படிக்கப்படுகிறது.[1] சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே என்பவரால்1911 இல் நாக்பூரில் நிறுவப்பட்டது.[2] பாரதிய ஜனதா கட்சி நாக்பூர் நாடாளுமன்ற முன்னால் உறுப்பினரும், தற்போதைய தமிழ்நாட்டின் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்துக்குச் சொந்தமான புரோகித் நிறுவனத்தால் இந்த செய்தித்தாள் கையகப்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், இது தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்து, அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இவ்விழாவினை அப்போதைய இந்தியக் குடியர்சுத்தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் திறந்து வைத்தார்.
கிட்டாவாடாவை மத்திய இந்திய நகரமான நாக்பூரில் சுதந்திர போராட்ட வீரர் கோபால் கிருஷ்ணா கோகலே தொடங்கினார். இது நாக்பூரின் முதல் மற்றும் ஒரே ஆங்கில நாளிதழாகும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இது நாக்பூர் டைம்ஸ் என்ற ஒரு மற்றொரு ஆங்கில நாளேட்டினை போட்டியாகக் கண்டறிந்தது. இருப்பினும் அது மூடப்பட்டது. பின்னர், 1978 ஆம் ஆண்டில் கிட்டாவாடா, பன்வாரிலால் புரோகித் அவர்களால் கையக்கபடுத்தப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் நாக்பூரில் உள்ள லோக்மத் டைம்ஸ் ஆகியவற்றுடன், போபால் மற்றும் ராய்ப்பூரில் இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சென்ட்ரல் க்ரோனிகல் ஆகியவற்றுடன் போட்டியிட்டாலும், கிட்டாவாடா இன்று மத்திய இந்தியாவின் தினசரி அதிக அளவில் விற்கப்படும் ஆங்கில பத்திரிக்கையாகும். நாக்பூர் நகரில் மட்டும் அதிகபட்சம் 130000 உடன் மத்திய இந்தியா முழுவதும் தினசரி 200000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்படுகின்றன.
கிட்டாவாடா ஒரே நேரத்தில் நாக்பூர், ஜபல்பூர், ராய்ப்பூர் மற்றும் போபால் நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நகர பதிப்பிலும் சிட்டி லைன் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு இணைப்பு உள்ளது. இது உள்ளூர் நகர செய்திகள் மற்றும் ஈடுபாடுகளைக் கையாள்கிறது. கிட்டாவாடா பிராந்திய பதிப்புகளையும் கொண்டுள்ளது: