2022 காமன்வெல்த் விளையாட்டு பதக்க விழாவில் தீனா. | |
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 3 சனவரி 1998 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா |
ஆண்டுகள் செயலில் | 2013 – இன்று வரையில் |
உயரம் | 1.64 மீ |
விளையாட்டு | |
நாடு | மலேசியா |
நிகழ்வு(கள்) | பெண்கள் & கலப்பு இரட்டையர் |
பதக்கத் தகவல்கள்
|
---|
தீனா முரளிதரன் (Thinaah Muralitharan; சீனம்: 蒂娜·慕拉利達蘭) என்பவர் மலேசிய இறகுப் பந்தாட்ட வீரர். 2013-ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய அணியில் இடம் பெற்றவர்.[1] 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்து உள்ளார்.[2]
இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் (Badminton World Federation); 2022 சூலை மாதம் 12-ஆம் தேதி புள்ளிவிவரங்களின்படி தீனா முரளிதரன், உலகத் தர வரிசையாளர்களில் 11-ஆவது இடம் வகிக்கிறார். தற்சமயம் இவர் நாட்டின் முதல் நிலை இரட்டையர் ஆட்டக்காரராவார்.[3]
2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் பெர்லி தான் (Pearly Tan) என்பவருடன் ஜோடி சேர்ந்த தீனா முரளிதரன்; கடந்த 2021-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக விருதுக்கான போட்டிகளின் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார். இவருடைய தங்கை செலினா (Selinaah Muralitharan), சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் இறகுப் பந்தாட்ட வீரர் ஆகும்.[4]
இவரின் தந்தையார் முரளிதரன்; ஒரு பொறியியலாளர். தாயார் டாக்டர் பரிமலா தேவி, இந்தத் தம்பதியரின் 2-ஆவது பிள்ளை தீனா முரளிதரன்.[5][5][6]
இவர் தமிழ், மலாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மாண்டரின் சீனம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். புக்கிட் ஜலீல் விளையாட்டுப் பள்ளியில் (Bukit Jalil Sports School) படிக்கும் போது தன் நண்பர்களிடம் இருந்து சீன மொழியைக் கற்றுக் கொண்டார்.[7][8]
பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வு. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறக்குறைய 5,000-ஆக இருக்கும்.
பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப் படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும். தற்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றன.
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்ப்பாளர் | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
2022 காமன்வெல்த் போட்டிகள் பெண்கள் இரட்டையர் | தேசிய கண்காட்சி மையம், பர்மிங்காம், இங்கிலாந்து | பெர்லி தான் | குளோ பிர்ச் லாரன் ஸ்மித் |
21–5, 21–8 | தங்கம் |
பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற ஆறு பேர்.
இடமிருந்து வலம்:
ஆண்டு | நிகழ்வு | இணையர் | எதிர்ப்பாளர் | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
2021 | சுவிஷ் ஓப்பன் இறுதி ஆட்டம் (Swiss Open) |
பெர்லி தான் | கேப்ரியேலா ஸ்டோவா சிடெபானி சிடோவா |
21–19, 21–12 | தங்கம் |
(BWF International Challenge/Series)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)