தீப் நாராயண் சிங் | |
---|---|
![]() | |
2வது பீகார் முதலமைச்சர் | |
பதவியில் 1 பிப்ரவரி 1961 – 18 பிப்ரவரி 1961 | |
ஆளுநர் | சாகீர் உசேன் |
முன்னையவர் | சிறி கிருட்டிணா சின்கா |
பின்னவர் | பினோதானந் ஜா |
3வது பீகார் நிதியமைச்சர் | |
பதவியில் 1 பிப்ரவரி 1961 – 18 பிப்ரவரி 1961 | |
முன்னையவர் | சிறி கிருட்டிணா சின்கா |
பின்னவர் | பீர் சந்த் பட்டேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புராந்தண்ட், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 25 நவம்பர் 1894
இறப்பு | 7 திசம்பர் 1977 ஹாஜிப்பூர், பீகார், இந்தியா | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மம்லதா தேவி |
வாழிடம் | புராந்தண்ட் |
தீப் நாராயண் சிங் (Deep Narayan Singh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியச் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றவரும் பீகாரின் முன்னாள் முதல்வரும் ஆவார்.[1]
பீகாரில் உள்ள புரந்தாண்டில் பிறந்தார். சிங், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராக இருந்தார்.[2] இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தேசியவாதிகளான இராஜேந்திர பாபு, அனுகிரஹா பாபு மற்றும் ஸ்ரீ பாபு ஆகியோரின் மூவருடன் தொடர்புடையவர். கிருஷ்ணா சின்காவினைத் தொடர்ந்து பீகார் முதல்வராகப் பதவியேற்றார்.
1979ஆம் ஆண்டில், பீகாரில் உள்ள ஹாஜிப்பூரில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்தால் இவரது நினைவாக அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டது.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)