துக்ரால் துகன் கான்

முகித் அத்-தின் துக்ரால்
துக்ரால் துகன் கான்
பீகாரின் ஆளுநர்
பதவியில்
1232-
ஆட்சியாளர்கள்சம்சுத்தீன் இல்த்துத்மிசு, இருக்நுதீன் பிரோசு
முன்னையவர்சைபுதீன் ஐபக்
வங்காளத்தின் ஆளுநர் (இலக்னௌதி)
பதவியில்
1236-
ஆட்சியாளர்கள்உருக்னுதீன் பிரோசு, ரசியா பேகம்
முன்னையவர்சைபுதீன் ஐபக், அவார் கான் ஐபக் (அபகரித்தவர்)
பின்னவர்துக்ளக் தமர் கான், நசிருதீன் புக்ரா கான்

துக்ரால் துகன் கான் (Tughral Tughan Khan), பின்னர் முகித் அத்-தின் துக்ரால் என அறியப்பட்ட இவர் தில்லி சுல்தானகத்தின் அதிகாரியாக இருந்தார். இவர் வங்காளத்தை பொது ஊழி 1236-1246 வரையிலும், மீண்டும் 1272-1281 வரையிலும் ஆட்சி செய்தார்.

சுயசரிதை

[தொகு]

இவர் கிதான் வம்சாவளியைச் சேர்ந்த துருக்கியர் மற்றும் சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு என்பவரால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை-அதிகாரியும் ஆவார். சைபுதீன் ஐபக் இலக்னௌதிக்கு மாற்றப்பட்டதால், 1232 இல் சுல்தானால் பீகார் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவருக்கு பதாவுனின் நில வருவாயை வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

சம்சுத்தீன் இல்த்துத்மிசு மரணம், சைபுதீன் ஐபக் படுகொலை மற்றும் கிளர்ச்சியாளர் அவார் கான் ஐபக் பதவியேற்றதைத் தொடர்ந்து, துகன் கான் வங்காளத்தை ஆக்கிரமித்து 1236 இல் அவார் கானை வெற்றிகரமாக தோற்கடித்தார். அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட உடனேயே, துகன் கான் பல பயணங்களுக்கு தலைமை தாங்கினார். தில்லி சுல்தானகத்திற்கு விசுவாசமாக இருந்தபோது இவர் வங்காளம், பீகார் மற்றும் அயோடத்தி முழுவதும் தனது ஆதிக்கத்தை நிறுவினார். இவர் செப்டம்பர் 1242 இல் மிதிலையைக் கைப்பற்றினார். மேலும், மேற்கில் காராவை நோக்கி முன்னேறினார். அங்கிருக்கும்போது சுல்தான் அலா உத் தின் மசூத் தில்லி சுல்தானாக பதவியேற்ற செய்தி கிடைத்தது.[1]

1242 இல், இவர் தனது பொருளாளர் முபாரக் கான் அல்-கசானுக்கு தெற்கு பீகாரில் ஒரு கட்டடம் கட்ட உத்தரவிட்டார். இக்கட்டடத்தில் "மஜ்லிஸ் அலி, பெரிய கான், உயர்ந்த காகான், உண்மை மற்றும் மதத்தின் மரியாதை, இளவரசர்கள் மற்றும் சுல்தான்களின் உதவியாளர், வெற்றியின் தேசபக்தர், துக்ரில் தி சுல்தானி" என்பதை குறிப்பிடும் கல்வெட்டு பிகார் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.[2]

1243 இல், துகன் கானின் ஆட்சியின் போது, ஒடிசாவின் இந்து மன்னர், முதலாம் நரசிங்க தேவன், தெற்கு வங்காளத்தின் மீது படையெடுத்து, கடாசின் போரில் துகான் கானை தோற்கடித்தார். ஒடிசா இராணுவம் வங்காளத்தின் தலைநகரான லக்னௌதி வரை முஸ்லிம்களைப் பின்தொடர்ந்து நகரத்தை முற்றுகையிட்டது. லக்னௌதியின் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். மேலும், நகரம் சூறையாடப்பட்டது.[3]

துகான் கான் தப்பி ஓடி, தில்லி சுல்தான் அலாவுதீன் மசூத் ஷாவிடம் உதவி கோரினார். அவர் காராவைச் சேர்ந்த மாலிக் கரகாஷ் கான் மற்றும் அவுத்தின் மாலிக் துக்ளக் தமர் கான் ஆகியோரை துகான் கானுக்கு உதவ அனுப்பினார். தில்லி ராணுவத்தைக் கண்ட ஒடிசா ராணுவம் பின்வாங்கியது. ஆனால் துக்ளக் தமர் கான் வங்காளத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது துகான் கானை தில்லிக்கு திரும்பச் செய்தது. இவ்வாறு துகான் கானின் வங்காளத்தின் பத்தாண்டு ஆட்சி கி.பி. 1246 இல் முடிவடைந்தது.

துகன் கான் பின்னர் சுல்தான் அலாவுதீன் மசூத் ஷாவினால் அயோத்தியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:Cite Banglapedia
  2. Ahmad Hasan Dani. "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. p. 1.
  3. Glimpses Of Kalinga History by Das, Manmatha Nath. Calcutta: Century Publishers. 1949. pp. 181.