தும்பாட் (P019) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Tumpat (P019) Federal Constituency in Kelantan | |
தும்பாட் மக்களவைத் தொகுதி (P019 Tumpat) | |
மாவட்டம் | தும்பாட் மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 150,248 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | தும்பாட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | தும்பாட், வாக்காப் பாரு, கோத்தா பாரு |
பரப்பளவு | 180 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | மும்தாஸ் நவி (Mumtaz Md. Nawi) |
மக்கள் தொகை | 179,944 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தும்பாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tumpat; ஆங்கிலம்: Tumpat Federal Constituency; சீனம்: 道北联邦选区) என்பது மலேசியா, கிளாந்தான், தும்பாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P019) ஆகும்.[7]
தும்பாட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து தும்பாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன.
தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது.
2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர்.
தும்பாட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் கிளாந்தான் உத்தாரா தொகுதியில் இருந்து தும்பாட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P015 | 1959–1963 | அசன் அகமது (Hassan Ahmad) |
மலேசிய இசுலாமிய கட்சி |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P015 | 1963–1964 | அசன் அகமது (Hassan Ahmad) |
மலேசிய இசுலாமிய கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | வான் அசன் வான் தாவூத் (Wan Hassan Wan Daud) | ||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P015 | 1971–1973 | அப்துல் அசீஸ் உமர் (Abdul Aziz Omar) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973-1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P016 | 1974–1978 | தெங்கு நூர் அசியா (Tengku Noor Asiah) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | துசுக்கி அகமது (Dusuki Ahmad) | ||
7-ஆவது மக்களவை | P017 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | வான் சமீல் மகமூத் (Wan Jamil Wan Mahmood) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
9-ஆவது மக்களவை | P019 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | கமருதீன் ஜாபர் (Kamarudin Jaffar) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சே அப்துல்லா மாட் நவி (Che Abdullah Mat Nawi) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | மும்தாஸ் நவி (Mumtaz Md. Nawi) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
149,371 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
106,131 | 70.07% | ▼ - 9.92% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
104,659 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
281 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,233 | ||
பெரும்பான்மை (Majority) |
34,793 | 33.24% | + 13.03 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | மும்தாஸ் நவி (Mumtaz Md. Nawi) |
104,659 | 65,426 | 62.51% | + 9.36% | |
பாரிசான் நேசனல் | சே அப்துல்லா மாட் நவி (Che Abdullah Mat Nawi) |
- | 30,633 | 29.27% | - 29.27% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | வான் அலமது ஜொகாரி (Wan Ahmad Johari Wan Omar) |
- | 7,762 | 7.42% | - 5.48 % ▼ | |
பூமிபுத்ரா கட்சி | சே முகமது அசுவாரி (Che Mohamad Aswari Che Ali) |
- | 593 | 0.57% | + 0.57% | |
வாரிசான் | கைருல் அசுவான் கமருதீன் (Khairul Azwan Kamarrudin) |
- | 245 | 0.23% | + 0.23% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)