தூவானத் தும்பிகள்

தூவானத் தும்பிகள்
இயக்கம்பி.பத்மராசன்
தயாரிப்புபி. ஸ்டான்லி
கதைபி.பத்மராசன்
இசைபி.பத்மராசன்
நடிப்புமோகன் லால்
சுமலதா
பார்வதி செயராம்
ஒளிப்பதிவுஅசயன் வின்சன்ட்
செயனன் வின்சன்ட்
படத்தொகுப்புபி.லால்
வி.டி.விசயன் (இணை)
கலையகம்சித்தாரா பிக்சர்சு
விநியோகம்காந்திமதி பில்ம்சு
வெளியீடுசூலை 31, 1987 (1987-07-31)
ஓட்டம்151 minutes
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

தூவானத் தும்பிகள் (மொ.பெ. Dragonflies in the Spraying Rain) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படமானது பி.பத்மராஜன் எழுதி இயக்கியதாகும், இது இவர் எழுதிய சொந்த புதினமான உதகப்போலயே என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் ஓர் புதிய முயற்சியில் உருவானதாகும். இது வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும் ரசிகர்களால் இன்றும் பெரிதும் விரும்பப்படுகிறது. அனைத்து காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இது ஐ. பி. என் லைவ் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படமானது சிறந்த இசை, பாடல்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்கள், விரிவான திரைக்கதை, மோகன்லால் மற்றும் சுமலதாவின் நடிப்பு ஆகியவைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் மழை என்பது ஓர் முக்கிய கருப்பொருளாகவும், கிட்டத்தட்ட ஓர் கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[1] [2][3][4][5][6][7][8][9]

கதைச்சுருக்கம்

[தொகு]

ஜெயகிருஷ்ணன் மணமாகாத ஒரு இளைஞர், அவர் ஒரு மாறுபட்ட இரட்டை வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு வாழ்க்கை நகரத்தில் உள்ள தனது நண்பர்களுடனும், மற்றொரு வாழ்க்கை தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவர்களின் கிராமத்திலும் வாழ்கிறார் . அவர் நகரத்தில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு துணிச்சலான பையனாக இருந்தாலும், அவர் வீட்டில் ஒரு சிக்கனமான குடும்ப மனிதர். அவரது இரட்டை வாழ்க்கை, கிளாரா மற்றும் ராதா என்ற இரண்டு பெண்களை அவர் எப்படி காதலிக்கிறார், அவர்களுக்கு இடையே முடிவெடுப்பதில் அவருக்கு ஏற்படும் சிரமம் ஆகியவற்றைப் பற்றிய படம் இது.

கதாப்பாத்திரங்கள்

[தொகு]
  • மன்னாரத்தோடி ஜெயகிருஷ்ணனனாக மோகன்லால்
  • கிளாராவாக சுமலதா
  • ராதாவாக பார்வதி
  • ரிஷி (ஜெயகிருஷ்ணனின் நண்பர்) வேடத்தில் அசோகன்
  • தங்கலாக பாபு நம்பூதிரி
  • ராதாவின் சகோதரர் மாதவனாக சிறீநாத்
  • ஜெயகிருஷ்ணனின் தாயார் லட்சுமியாக சுகுமாரி
  • ரவுன்னி அல்லது ராமனுன்னி நாயராக செகதி சிறீகுமார்
  • ராதாவின் தந்தையாக சுகுமாரனாக சங்கரதி
  • மேத்யூ சோசப்பாக எம். ஜி. சோமன் (கிளாராவின் கணவராக கேமியோ)
  • ஜெயகிருஷ்ணனின் சகோதரியான மாலினியாக சுலக்சனா
  • ராதாவின் உறவினரான ரஞ்சினியாக செயலிலிதா.
  • சாந்தகுமாரி
  • பாபுவாக அலெக்சு மேத்யூ (தேவமாதா பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Experiments in Malayalam cinema". 29 August 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/photo-features/experiments-in-malayalam-cinema/photostory/29715180.cms. 
  2. "Karakath Unni Menon" பரணிடப்பட்டது 20 நவம்பர் 2004 at the வந்தவழி இயந்திரம்.
  3. "നിർമാണം പാതിവഴിയിൽ നിലച്ച 'തൂവാനത്തുമ്പികൾ'; സഹായമെത്തിച്ചത് മോഹൻലാൽ".
  4. "'ബഹളക്കാർക്കിടയിൽ നിന്ന് അയാൾ ഓടി വന്ന് ഷർട്ടിൽ കയറിപിടിച്ചതോടെ മോഹൻലാൽ ഞെട്ടിപ്പോയി'".
  5. "ജയകൃഷ്ണനും ക്ലാരയും @ 30".
  6. "Hotstar, Netflix, Amazon: Here are 10 movies to check out this Valentine's Day". 14 February 2020.
  7. . 24 January 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/remembering-mastero-filmmaker-padmarajan-with-his-popular-love-stories/articleshow/73554198.cms. 
  8. "ആ അനുഭവത്തെ ക്ലാരയെന്നു വിളിച്ച് അവർ ഒരുപാട് മഴകൾ നനഞ്ഞു; പത്മരാജനെ ഓർക്കുമ്പോൾ".
  9. "ക്ലാരയുടെ ഓർമ്മകൾക്കൊപ്പം ഇന്നും മഴ പെയ്യുന്നുണ്ട്, തൂവാനത്തുമ്പികൾക്ക് ഇന്ന് 33 വയസ്".