தெக்கும்கூர் இராச்சியம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
1103–1750 | |||||||
நிலை | கேரளாவின் மன்னர் அரசு | ||||||
தலைநகரம் | வென்னிமலை & மணிகண்டபுரம் (1100~1445) சங்கனாச்சேரி & தாலியந்தனபுரம் (கோட்டயம்]])]] (1445-1750) | ||||||
பேசப்படும் மொழிகள் | மலையாளம் & தமிழ் | ||||||
சமயம் | இந்து சமயம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
மணிகண்டன் மார் | |||||||
• 1710–1750 | ஆதித்திய வர்மா மணிகண்டன் | ||||||
வரலாற்று சகாப்தம் | பேரரசுவாதம் | ||||||
• தொடக்கம் | 1103 | ||||||
• சங்கனாச்சேரி போர் | 1749 | ||||||
• முடிவு | 1750 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
தெக்கும்கூர் இராச்சியம் (Thekkumkur) மலையாளம்: തെക്കുംകൂർ രാജ്യം) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தெற்கு பகுதியில் பொ.ச. 1103 முதல் 1750 வரை சுதந்திரமாக ஆட்சி செய்துவந்த ஒரு அரசக் குடும்பம் ஆகும்.[1] இதை தெக்கும்கூர் அரசக் குடும்பம் (எடத்தில் குடும்பம்) ஆட்சி செய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் மீனச்சிலாற்றுக்கும், பம்பை ஆற்றுக்கும் இடையில் வேம்பநாட்டு ஏரி வரை தெக்கும்கூர் அமைந்திருந்தது. மகோதயபுரத்தின் சேர குலசேகர வம்சத்தின் கடைசி காலத்தில் சுதேச மாநிலங்களில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களின் விளைவாக தெக்கும்கூர் உருவானது. தெக்கும்கூர் என்ற தலைப்பின் நேரடிப் பொருள் தெற்கு ஆட்சிப் பகுதி என்பதாகும். இது, வடக்கும்கூர் (வடக்கு ஆட்சிப் பகுதி ) என்று அழைக்கப்படும் மற்றொரு இராச்சியத்திலிருந்து இவர்களை வேறுபடுத்தியது. இது வடக்குப் பகுதியில் எல்லையாக இருந்தது. அரச குடும்பமான தெக்கும்கூர் கோவிலகம் புத்துப்பள்ளிக்கு அருகிலுள்ள வென்னிமலை, மணிகண்டபுரம் ஆகிய இடங்களில் இருந்தன. பின்னர் அது சங்கனாச்சேரியின் புழவத்திலுள்ள நீராழி அரண்மனைக்கும், தாலியந்தனபுரத்திலுள்ள (கோட்டயம்) தாலிக்கோட்டைக்கும் மாற்றப்பட்டது.
புழவத்திலுள்ள நீராழி அரண்மனையும்,(சங்கனாச்சேரி) கோட்டயத்தில் தாலிகோட்டை கோவிலகம் (தாலியந்தானபுரம்) ஆகியவை தெக்கும்கூர் மன்னர்களின் முக்கிய குடியிருப்புகளாகும்.[2] கோட்டயத்தில் தாலிகோட்டை கோவிலகமும் (தாலியந்தானபுரம்) [3] ஆகியவை தெக்கும்கூர் மன்னர்களின் முக்கிய குடியிருப்புகளாகும். இதன் அரசர்கள் ஆரம்பத்தில் வென்னிமலையிலும் ,[4] மணிகண்டபுரத்திலும் [5] வாழ்ந்தனர். இது அரசக் குடியிருப்பு நீராழி அரண்மனைக்கு மாற்றப்படும் வரை தொடர்ந்தது. தெக்கும்கூர் அரசக் குடும்பத்திற்கு ஆறன்முள கொட்டாரம், கேரளபுரம் அரண்மனை, எடத்தில் அரண்மனை பல்லம் உள்ளிட்ட பல அரண்மனைகள் இருந்தன. [6]