தெனோம் (P181) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Tenom (P181) Federal Constituency in Sabah | |
தெனோம் மக்களவைத் தொகுதி (P181 Tenom) | |
மாவட்டம் | தெனோம் மாவட்டம் உட்பகுதி பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 42,045 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கெனிங்காவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | தெனோம்; மெலாலாப், கெமாபோங் |
பரப்பளவு | 2,451 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | சுயேச்சை |
மக்களவை உறுப்பினர் | ரிதுவான் ருபின் (Riduan Rubin) |
மக்கள் தொகை | 50,230 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தெனோம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tenom; ஆங்கிலம்: Tenom Federal Constituency; சீனம்: 丹南联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; தெனோம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P181) ஆகும்.[5]
தெனோம் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து தெனோம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தெனோம் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெனோம் நகரம். தெனோம் நிலப்பகுதி, முன்னர் காலத்தில் போர்ட் பர்ச் (Fort Birch) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் ஆளுநர் உட்போர்ட் பர்ச் (North Borneo Governor Woodford Birch) என்பவரின் பெயர் அந்த நகருக்கு வைக்கப்பட்டது.
1904-ஆம் ஆண்டில் தெனோம் தொடருந்து நிலையத்தில் இருந்து பியூபோர்ட் தொடருந்து நிலையம் , மெலாலாப் தொடருந்து நிலையம்; ஆகிய நிலயங்களுக்கு வடக்கு போர்னியோ தொடருந்து பாதை (North Borneo Railway Line) முடிந்ததைத் தொடர்ந்து, போர்ட் பர்ச் என்பது "தெனோம்" என மறுபெயரிடப்பட்டது.[7]
தெனோம் நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே 176 கி.மீ. தொலைவிலும்; சபாவின் பிரபலமான இடங்களில் ஒன்றான லோங் பாசியா (Long Pasia) நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
தெனோம் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P158 | 1995-1999 | ராதன் மாலே (Raden Malleh) |
ஐக்கிய சபா கட்சி (PBS) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | ரிசால்மான் அப்துல்லா (Rizalman Abdullah) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
11-ஆவது மக்களவை | P181 | 2004-2008 | ரயிமி உங்கி (Raime Unggi) | |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018-2022 | நூரித்தா சுவால் (Noorita Sual) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ரிதுவான் ருபின் (Riduan Rubin) |
சுயேச்சை |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரிதுவான் ருபின் (Riduan Rubin) | சுயேச்சை (Independent) | 10,027 | 35.00 | 35.00 | |
நூரித்தா சுவால் (Noorita Sual) | பாக்காத்தான் (PH) | 8,919 | 31.13 | 31.13 | |
ஜமாவி ஜபார் (Jamawi Ja’afar) | பாரிசான் நேசனல் (BN) | 8,625 | 30.11 | 15.89 ▼ | |
உக்கிம் புவான்டி (Ukim Buandi) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 992 | 3.46 | 3.46 | |
பெகி சாவ் சி திங் (Peggy Chaw Zhi Ting) | சுயேச்சை (Independent) | 86 | 0.30 | 0.30 | |
மொத்தம் | 28,649 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 28,649 | 98.52 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 429 | 1.48 | |||
மொத்த வாக்குகள் | 29,078 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 42,045 | 68.14 | 10.77 ▼ | ||
Majority | 1,108 | 3.87 | 1.22 ▼ | ||
சுயேச்சை கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)