துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 9 திசம்பர் 2010 |
வகை | Space Agency |
ஆட்சி எல்லை | South African Government |
தலைமையகம் | Pretoria |
பணியாட்கள் |
|
அமைப்பு தலைமைகள் |
|
மூல நிறுவனம் | Department of Science and Innovation |
வலைத்தளம் | www |
தென்னாப்பிரிக்க தேசிய விண்வெளி நிறுவனம் ( SANSA ) என்பது தென்னாப்பிரிக்காவின் அரசு நிறுவனமாகும், இது வானூர்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு பொறுப்பேற்றுள்ளது. இது விண்வெளி தொடர்பான செயல்பாடுகளிலும் விண்வெளி அறிவியலில் ஆராய்ச்சியிலும் கூட்டுறவை வளர்க்கிறது, மனித உழைப்பு வளத்தால் அறிவியல் பொறியியலை மேம்படுத்த முயல்கிறது; அத்துடன் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்த் விரும்புகிறது, மேலும் விண்வெளி தொழில்நுட்பங்களின் தொழில்துறை வளர்ச்சிக்குத்தேசிய அரசாங்கத்தின் கட்டமைப்புக்குள் உகந்த சூழலை உருவாக்குவதை ஆதரிக்கிறது.[2]
சான்சா 2010, திசம்பர் 9 அன்று தேசிய விண்வெளி முகமை சட்டம் வழி நிறுவப்பட்டது .[3]
தற்போது சான்சாவின் முதன்மையான கவனம் செயற்கைக்கோள்கள், பிற திட்டங்களால் தொலைவுணர்தல் வழியாகப் பெறப்பட்ட தரவைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் வெள்ளம், தீ, வள மேலாண்மை, சுற்றுச்சூழல் நிகழ்வுகள் குறித்த மதிப்பீட்டை வழங்குவதாகும்.[4][5][6]
2009 ஆம் ஆண்டில் தற்காலிக அரசத் தலைவர் கலேமா மோட்லாந்தே நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் சான்சா உருவாக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களையும் ஆராய்ச்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆப்பிரிக்காவில் விண்வெளித் ஆராய்ச்சிக்கான வட்டார மையமாக பங்கு வகிக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1950 கள் முதல் 1970 கள் வரை நாசாவால் நடத்தப்பட்ட நிலா, கோள்கள்களுக்கிடையேயான பயணங்களுக்கு ஹார்ட்பீஸ்டோக் என்ற இடத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு நிலையத்திலிருந்து ஒத்துழைப்பு தரப்பட்டது. அங்குச் செவ்வாய் கோளில் முதலில் வெற்றிகரமாகப் பறந்த மாரினர் IV விண்கலத்திலிருந்து செவ்வாய்க் கோளின் தொடக்கப் படங்கள் பெறப்பட்டன.[7] மற்ற தென்னாப்பிரிக்க கட்டமைப்புகளும் செயற்கைக்கோள்களைக் கண்காணித்து அவற்றின் வட்டணைகளின் மீது வளிமண்டலத்தின் விளைவுகளைத் தீர்மானிக்க உதவின.[7]
1980களில் ஏவூர்தி, செயற்கைக்கோள் உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன , ஆனால் 1994க்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. 1999 - தென்னாப்பிரிக்கா தனது முதல் செயற்கைக்கோளான சுன்சாட்டை அமெரிக்காவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. தனது இரண்டாவது செயற்கைக்கோள் சும்பாண்டிலாவைக் கசகசுத்தானில் உள்ள பைகோனூர் விண்தளத்தில் இருந்து 2009 இல் ஏவியது.[8]
விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே சான்சாவின் நோக்கம்.
தென்னாப்பிரிக்காவின் புவி கண்காணிப்பு செயல்நெறி வழிக்கு (SAEOS) சான்சா ஒரு முதன்மைப் பங்களிப்பாளராக உள்ளது , இதன் முதன்மை நோக்கம் " புவி கண்காணிப்புத் தரவுகளைத் திரட்டல், தன்மயப்படுத்தல், பரப்புதலை ஒருங்கிணைப்பதாகும். இதனால் தென்னாப்பிரிக்காவின் முடிவெடுத்தல், பொருளாதார வளர்ச்சி, நீடுதிற வளர்ச்சியையும் சார்ந்த கொள்கையை வகுப்பதில் முழு வல்லமையையும் பெறமுடியும்.
தென்னாப்பிரிக்கப் புவி நோக்கீட்டு வலையமைப்பு (SAEON) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து புவியில் உள்ள களநோக்கீட்டு அளவீடுகளில் கவனம் செலுத்தி, விண்வெளிசார் தரவுத் தளங்களை சான்சா வழங்கும்.
சான்சா விண்வெளி அறிவியல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரே விண்வெளி வானிலை பிராந்திய எச்சரிக்கை மையத்தை கொண்டுள்ளது , இது சர்வதேச விண்வெளி சுற்றுச்சூழல் சேவையின் (ஐ. எஸ். இ. எஸ்.) ஒரு பகுதியாக செயல்படுகிறது.[9] விண்வெளி வானிலை மையம் சூரியனையும் அதன் செயல்பாட்டையும் கண்காணித்து , விண்வெளி வானிலை குறித்த ஆரம்ப எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை வழங்குவதன் மூலம் தேசத்திற்கு ஒரு முக்கியமான சேவையை வழங்குகிறது. விண்வெளி வானிலை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் முதன்மையாக பாதுகாப்பு வானூர்தி வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்து அமைப்புகளுக்கு தேவைப்படுகின்றன.