Uwang Temuan; Eang Temuan Orang Temuan | |
---|---|
![]() பாரம்பரிய உடையில் தெமுவான் மக்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
19,343 (2010)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
மொழி(கள்) | |
தெமுவான் மொழி, மலாய் மொழி, மலேசிய ஆங்கிலம் | |
சமயங்கள் | |
நாட்டுப்புற மதம் கிறிஸ்தவம் இசுலாம்[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமலாய் மக்கள்,[2] மலாய் மக்கள் |
தெமுவான் மக்கள் (ஆங்கிலம்: Temuan People; மலாய்: Suku Temuan) [3]என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[4]
தெமுவான் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் பகாங், சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6]
மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7]
மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் தெமுவான் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.
தெமுவான் மக்கள் தொகை பின்வருமாறு:-
ஆண்டு | 1960[10] | 1965[10] | 1969[10] | 1974[10] | 1980[10] | 1991[11] | 1993[11] | 1996[10] | 2000 | 2003 | 2004[12] | 2008[13] | 2010 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 5,241 | 7,221 | 8,631 | 8,698 | 9,449 | 15,057 | 16,020 | 16,020 | 18,560 | 22,162 | 21,512 | 22,700 | 19,343 |
மாநில வாரியாக தெமுவான் மக்களின் மக்கள்தொகைப் பகிர்வு (JAKOA1996):-[10]
மாநிலம் | தெமுவான் | பழங்குடிகள் மொத்தம் |
தெமுவான் % |
---|---|---|---|
சிலாங்கூர் | 7,107 | 10,472 | 67.9% |
நெகிரி செம்பிலான் | 4,691 | 6,188 | 75.8% |
பகாங் | 2,741 | 33,741 | 8.1% |
மலாக்கா | 818 | 831 | 98.4% |
ஜொகூர் | 663 | 7,379 | 9.0% |
மொத்தம் | 16,020 | 92,529 | 18.0% |