நடத்தும் நகரம் | காட்மாண்டு, பொக்காரா & ஜனக்பூர் | ||
---|---|---|---|
நாடு | நேபாளம் | ||
பங்கேற்கும் நாடுகள் | 7 | ||
பங்கேற்கும் போட்டியாளர்கள் | 2715 | ||
நிகழ்ச்சிகள் | 28 விளையாட்டுகள் 308 போட்டிகள் | ||
துவக்க விழா | 1 டிசம்பர் | ||
நிறைவு விழா | 10 டிசம்பர் | ||
அலுவல்முறை துவக்கம் | வித்யா தேவி பண்டாரி (நேபாளக் குடியரசுத் தலைவர்)[1] | ||
போட்டியாளர் உறுதிமொழி | பரஸ் கட்கா (கிரிக்கெட் வீரர்)[2] | ||
நடுவர் உறுதிமொழி | தீபக் தபா (இறகுப்பந்தாட்ட வீரர்)[2] | ||
Torch lighter | தீபக் பிஸ்தா[3] | ||
Main venue | தசரத ரங்கசாலை விளையாட்டரங்கம் | ||
Website | www | ||
|
2019 தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் (2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்), இது நேபாள நாட்டில் நடைபெறும் 13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும்.
13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் நேபாள நாட்டின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று நகரங்களில் டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மாலைதீவுகள், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஏழு தெற்காசிய நாடுகளின் 2,175 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 1 டிசம்பர் 2019 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள தசரத ரங்கசாலை விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார்.[4][5][6][7] இதில் 308 போட்டிகள் கொண்ட 28 விளையாட்டுக்களில், ஏழு தெற்காசியா நாடுகளின் 2715 விளையாட்டு வீரர்களும், வீரங்கனைகளும் பங்கு பெறுகிறார்கள்.
நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இடம் | விளையாட்டுகள் |
---|---|
தசரத ரங்கசாலை விளையாட்டரங்கம் | தடகளப் போட்டிகள் கால்பந்தாட்டம் (ஆண்கள்) |
பன்னாட்டு விளையாட்டு வளாகம் | குத்துச் சண்டை கராத்தே குறி பார்த்துச் சுடுதல் சுவர்ப்பந்து நீச்சல் போட்டிகள் டைக்குவாண்டோ டென்னிசு |
திருபுரேஷ்வரர் உள்விளையாட்டரங்கம் | கூடைப்பந்து கைப்பந்தாட்டம் |
திரிபுவன் பல்கலைக் கழக பன்னாட்டு கிரிக்கெட் திடல் | கிரிக்கெட் (ஆண்கள்) |
சாகித் பூங்கா, கோகர்ணம் | மிதிவண்டி ஓட்டம் (மலைப்பாதையில்) |
காட்மாண்டு சுற்றுச் சாலை | மிதிவண்டி ஓட்டம் (சாலையில்) |
கீர்த்திப்பூர் உள்விளையாட்டரங்கம் | வாள்வீச்சு |
கோகர்ணம் காட்டு விடுதி | குழிப்பந்தாட்டம் |
லாங்கே இராணுவ உடல் திறன் மையம் | ஜூடோ உஷூ |
அல்சவுக், ஏ பி எப் அரங்கம் | கபடி |
கீர்த்திப்பூர் புது பசார் | கோ-கோ |
லைன்சவுர் டென்னீஸ் அரங்கம் | மேசைப்பந்தாட்டம் |
இடம் | விளையாட்டுகள் |
---|---|
பொக்காரா உள்விளையாட்டரங்கம் | இறகுப்பந்தாட்டம் |
பொக்காரா விளையாட்டரங்கம் | கிரிக்கெட் (பெண்கள்) |
பொக்காரா விளையாட்டரங்கம் | வில்வித்தை கால்பந்தாட்டம் (பெண்கள்) |
பொக்காரா உள்விளையாட்டரங்கம் | கைப்பந்தாட்டம் |
வசுந்தரா பூங்கா | நெடுமுப்போட்டி |
பாரகிகட் | கடற்கரை கைப்பந்தாட்டம் |
மேட்டிபானி | பாரம்தூக்கல் |
இடம் | விளையாட்டுகள் |
---|---|
ஜனக்பூர் உள்விளையாட்டரங்கம் | மல்யுத்தம் |
நேபாள அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் 13 மே 2019 அன்று, தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான்று ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு ஓடும் வீரர்களின் பனியனில் தெற்காசியாவில் மட்டும் காணப்படும் புல்வாய் எனும் ஒரு வகை மானை உருவம் பனியனில் இருக்கும்.[1][8]
தெற்காசிய ஒலிம்பிக் குழு, நேபாளத்தின் உலகப்பாரம்பரியக் களங்களின் பின்னணியில் பறக்கும் புறாவை 2019 தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக அறிவித்துள்ளது.[8]
ஏழு தெற்காசியா நாடுகளின் 2,717 விளையாட்டு வீரர்கள் விவரம்:
10 டிசம்பர் 2019 அன்று பிற்பகலில் முடிவடைந்த 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களை வென்று (மொத்தம் 312 பதக்கங்கள்) முதலிடத்தையும், நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலப் பதக்கங்கள் (மொத்தம் 206) வென்று இரண்டாமிடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் பதக்கங்களுடன் (மொத்தம் 251) மூன்றாமிடத்தையும், வங்காளதேசம் 19 தங்கம், 32 வெள்ளி, 87 வெண்கல பதக்கங்கள் வென்று (மொத்தம் 138) நான்காம் இடத்தையும், பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்கள் வென்று (மொத்தம் 131) ஐந்தாம் இடத்தையும், மாலைத்தீவுகள் ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கங்கள் வென்று ஆறாம் இடத்தையும், பூட்டான் 7 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் வென்று ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.[9][10][11]
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தியா (IND) | 174 | 93 | 45 | 312 |
2 | நேபாளம் (NEP)* | 51 | 60 | 95 | 206 |
3 | இலங்கை (SRI) | 40 | 83 | 128 | 251 |
4 | பாக்கித்தான் (PAK) | 31 | 41 | 59 | 131 |
5 | வங்காளதேசம் (BAN) | 19 | 32 | 87 | 138 |
6 | மாலைத்தீவுகள் (MDV) | 1 | 0 | 4 | 5 |
7 | பூட்டான் (BHU) | 0 | 7 | 13 | 20 |
மொத்தம் (7 நாடுக்கள்) | 316 | 316 | 431 | 1063 |
2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டுகளை நடத்தும் நேபாள ஒலிம்பிக் குழு, விளையாட்டு நிகழ்வுகளை வெளிநாடுகளில் ஒளி பரப்பும் உரிமையை இந்தியாவின் என் கே மீடியா நிறுவனத்திற்கு[12] விற்றுள்ளது.[13] நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நேபாளத் தொலைக்காட்சி, எபிஐ தொலைக்காட்சி மற்றும் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.